பெங்களூர் வெற்றி : எலிமினேட்டான ராஜஸ்தான் !

213707_Fotor

 புனேவில் இன்று நடைபெற்ற பரபரப்பான எலிமினேட்டர் போட்டியில் பெங்களூர்- ராஜஸ்தான் அணிகள் மோதியது. டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். டி வில்லியர்ஸ் மந்தீப் சிங்கின் அதிரடியில் அண்டஹ் அணி 180 ரன்கள் குவித்தது. 

எலிமினேட்டாகி விடக் கூடாது என்ற வெறியுடன் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ரகானே வாட்சன் இருவரும் களமிறங்கினர். 2 வது ஓவரிலேயே வாட்சன் வெளியேற, அடுத்து வந்த சாம்சன் 5 வது ஓவரில் பெவிலியன் திரும்ப, பின்னர் களமிறங்கிய சுமித் நாயர் இருவரும் முறையே, 9 மற்றும் 13-வது ஓவர்களில் அவுட்டாக, பார்ட்னர்ஷிப்புக்கு சரியான ஆளில்லாமல் தொடக்க வீரர் ரகானே திண்டாடினார். 

42 ரன்கள் எடுத்த ரகானேவும் 14வது ஓவரில் வெளியேற ஆட்டம் முடிந்து விட்டதாகவே ராஜஸ்தான் ரசிகர்கள் கருதினர். ரசிகர்களின் எதிர்பார்ப்பின் படியே பாக்னர், பின்னி, மோரிஸ் என்று அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிய 19 ஓவரில் 109 ரன்களுடன் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது ராஜஸ்தான். இதனால் எகிறி அடித்த பெங்களூர் அணி ராஜஸ்தான் அணியை 71 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

j_Fotor