முஸ்லிம் காங்கிரசின் போராளிகள் பற்றி என்ன கூறவருகிறீர்கள் என தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகர் மொஹிடீன் பாவா விடம் கேட்கப் பட்டபோது அவர் கூறியதாவது,
ஆட்சியில் முழு அமைச்சர் மற்றும் அரை அமைச்சர் பதவிகளில் அமர்த்தி ஊர் ஊராய் மாலை போட்டு ஆரார்த்தி எடுக்கும் போராளிகள் எனக் கூறிக் கொள்ளும் சமூகம்,எப்போது தான் விழித்து எழும் ?
மீண்டும் ஒரு தேர்தல் வருகிறது உள்ளுராட்சித் தேர்தல் ,இப்படியே காலம் கடத்தும் போராளிகள். உண்மையான முஸ்லிம் காங்கிரசின் ஆரம்பப் போராளிகளாய் இருந்ததவர்கள் இப்போது ஐம்பது ,அறுபது வயதைத் தாண்டியவர்கள் . ஆனால் இன்றும் மாடு அசை போடுவது போல் நேற்று முளைத்த அரசியல் வரலாறு தெரியாத புல்லுகள் போராளி போராளி என்று விடிவை நோக்கி அல்ல அழிவை நோக்கியே நகர்கிகின்றனர் ஏன் எனில் சில அரசியல் வரலாறுகள் மறைக்கப் பட்டுள்ளது தட் கால இளைஜர்களுக்குத் தெரியாது
நீங்கள் போராளிகள் என்று கூறுவதுக்கு நீங்கள் என்ன களம் இறங்கி போர் தொடுத்தவர்களா ? நீங்கள் போராளிகள் அல்ல வாக்காளர்கள். நீங்கள் பிச்சை எடுப்பவர்கள் அல்ல வாக்குப் பிச்சை இடுபவர்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள் .
உங்களுக்குள் புரட்சி எழ வேண்டும் புரட்சி என்பது சிந்தனையில் உருவாகுவது அச் சிந்தனை ஏமாற்றப் பட்ட மக்களிடம் இருந்து எழுவது . நான் இங்கு கூற வருவது நீங்கள் அரசியல் ரீதியில் அரசியல் வாதிகளால் ஏமாற்றப் பட்ட மக்கள்தான் ஆதாலால் நீங்கள் சிந்தனைப் புரட்சியாளர்களாக மாற வேண்டும் .
ஆதலால் இனியாவது சிந்தியுங்கள் ,அரசியல் பலம் தங்கள் கையில்தான் இருக்கிறது என்பதை தட்போதுள்ள இளைஞ்சர் சமூகம் உணரத் தவறி விடுகின்றனர். நீங்கள் பிச்சை போட்ட அரசியல் வாதிகளிடம் நீங்களே பிச்சை கேட்டுத் திரிவது உங்களது சுய சிந்தனா சக்தி முடக்கப் பட்டதே காரணமன்றி வேறில்லை. சுய சிந்தனையை அடகு வைத்தவர்கள்
தாங்கள் போராளிகள் அல்ல அரசியல் வாதிகளுக்கு பிச்சை இடுபவர்கள் என்பதை இப் போராளிகள் எனக் கூறித் திரிவோர் உணராத வரை இவர்கள் விடிவை நோக்கி அல்ல அழிவை நோக்கியே நகர்கின்றனர் என்பதே என் கருத்து