2017 இல் அர­சியல் சது­ரங்­கத்தில் தீவி­ர­மாக காய்கள் நகர்த்­தப்­பட போகி­றது : பஷீர் சேகு தாவூத்

முஸ்லிம் காங்­கி­ரசின் தவி­சா­ளரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான பசீர் சேகு­தாவூத் இன்­றைய தேசிய அர­சியல் நீரோட்­டத்தில் முஸ்லிம் அர­சியல் கட்­சி­க­ளி­னதும், தலை­மை­க­ளி­னதும் பெறு­மானம் குறைந்­துள்­ளது என லங்கா முஸ்லிம் கங்­கி­ரசின் தவி­சா­ளரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான பசீர் சேகு­தாவூத் தெரி­வித்தார். நேற்று வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­யுள்ளார்.

அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, தற்­போ­தைய அர­சியல் கள நில­வ­ரத்­தின்­படி 2017 ஆம் ஆண்டு பெரிய கட்­சி­க­ளுக்­கி­டையில் பெரும் போராட்­டங்கள் வெடிக்கப் போகி­றது என்­பதை அனு­மா­னிக்க முடி­கி­றது.

சுதந்­திரம் கிடைத்த சிறிது காலத்தில் ஐக்­கிய தேசியக் கட்­சியில் ஏற்­பட்ட பாரிய பிளவின் பின், இலங்­கையில் இரண்டு பெரிய கட்­சி­களே இருந்து வந்­தன. 2015 ஆம் ஆண்டு நடை­பெற்ற நாடா­ளு­மன்றத் தேர்­தலின் பின்னர் வழ­மைக்கு மாறாக நாட்டில் மூன்று பெரிய கட்­சிகள் இருப்­பது வெளிப்­பட்­டது.

இப்­பெரும் கட்­சி­க­ளுக்­கி­டையில் நிகழும் அதி­காரப் போராட்­டத்தில் மக்கள் செல்­வாக்­குள்ள பெருந்­த­லை­வர்கள் நேர­டி­யா­கவும், சில வெளி­நா­டு­களின் முக­வர்கள் மறை­மு­க­மா­கவும் பங்­கு­பற்­றுவர்.

இக்­கால கட்­டத்தில் தமிழர் தலை­வர்கள் பெரும் செல்­வாக்கு உள்­ள­வர்­க­ளாகத் திகழ்­வார்கள்.

இது முப்­பெரும் கட்­சி­க­ளுக்­கி­டை­யி­லான அர­சியல் விளை­யாட்டுப் போட்­டி­யாக இருப்­பினும் கொள்கை அடிப்­ப­டையில் இவை இரு அணி­களே ஆகும். அதா­வது சிங்­கள பெருந்­தே­சி­ய­வாதம் இரண்டு அணி­களின் கொள்­கை­யா­கவும், தாரா­ள­வாத ஜன­நா­ய­க­வாதம் மற்ற அணியின் கொள்­கை­யா­கவும் காணப்­ப­டு­கி­றது.

பெருந்­தே­சி­ய­வாத அணி­களில் ஒன்றின் தலை­வ­ராக ஜனா­தி­பதி மைத்­தி­ரியும், மற்ற அணியின் தலை­வ­ராக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­தவும் இருப்பர். தாரா­ள­வாத ஜன­நா­யக அணியின் தலை­வ­ராக பிர­தமர் ரணில் இருப்பார்.

சிங்­கள தீவி­ர­வாத அர­சியல் அமைப்­பு­களும் அதன் தலை­வர்­களும் தமது கொள்கை சார்ந்த இரு தலை­வர்­களின் பக்கம் பிரிந்தும் சார்ந்தும் நிற்பர்.அதா­வது ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் இரண்டு பிரி­வு­க­ளிலும் நிற்பர். துர­திஷ்ட வச­மாக வர­லாற்றில் என்­றுமே ஐ.தே.கட்­சி­யுடன் இணைந்து செயல்­பட்­டி­ராத இடது சாரிக் கட்­சி­களும் இவ்­வ­ணி­க­ளி­லேயே சேர்ந்­தி­ருப்பர்.

இலங்­கைத்­த­மிழர் கட்­சி­களும், இந்­திய வம்­சா­வளித் தமிழர் கட்­சி­களும், தாரா­ள­வாத ஜன­நா­ய­க­வாதக் கொள்­கையை பின்­பற்றும் ஐக்­கிய தேசியக் கட்­சி­யோடு இணைந்­தி­ருப்பர்.

வட­கி­ழக்கு தமி­ழர்­களைப் பிர­தி­நி­தித்­துவம் செய்யும் பிர­தான கட்சி இவ்­வ­ணி­யுடன் உள்­ளு­றைந்து அடை­யாளம் காட்­டா­விட்­டாலும் தங்­க­ளது பலத்தை இவ்­வ­ணிக்கே பகிரும்.சிங்­களத் தேசி­ய­வா­தி­களில் ஒரு பகு­தியும் இவ்­வ­ணிக்கு ஆத­ர­வ­ளிக்கும்.

பெரிய கட்­சி­களின் புதிய அர­சியல் முன்­னெ­டுப்பு­களில் முஸ்லிம் தலை­மைகள் ஓரங்­கட்­டப்­பட்­டி­ருப்­பதை அவ­தா­னிக்க முடி­கி­றது. மூன்று பெரிய தரப்­பு­களும் முஸ்­லிம்­க­ளுக்கு எந்­த­வித பங்கும் கொடுக்கக் கூடாது ஆனால், அவர்கள் தங்­க­ளு­டனே இருக்­கு­மாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்று வியூகம் வகுத்து செயற்­ப­டு­வதைப் புரிந்து கொள்ள முடி­கி­றது.

இந்த வியூகம் அதி­க­மாக ஐக்­கிய தேசியக் கட்­சிக்கே வெற்­றி­ய­ளிக்கக் கூடி­யது.

இன்­றைய தேசிய அர­சியல் நீரோட்­டத்தில் முஸ்லிம் அர­சியல் கட்­சி­க­ளி­னதும், தலை­மை­க­ளி­னதும் பெறு­மானம் குறைந்­துள்­ளது.
முஸ்லிம் குடிமைச் சமூ­கமும், இஸ்­லா­மிய மதம் சார்ந்த அமைப்­பு­களும் சமூ­கத்தில் அர­சியல் அபிப்­பி­ரா­யங்­களை உரு­வாக்கும் தன்­மை­யு­டை­ன­வாக வளர்ச்சி பெறத் தொடங்­கி­யுள்­ளன.இந்த நிலை­மைக்கு முஸ்லிம் அர­சியல் தலை­மை­களின் கீர்த்தி குறை­வ­டைந்­தி­ருப்­பதும், இவர்­களின் தேவைக்கு ஒவ்வும் செயல்­முறை (Pragmatism) குறை­பா­டு­டை­ய­தாக காணப்­ப­டு­வதும் கார­ண­மாகும்.

மேலும், புதிய தலை­முறை எதிர் பார்க்கும் “திட­காத்­திரம்” முஸ்லிம் அர­சியல் அரங்­கத்தில் காணாமல் போயி­ருப்­பதும் முஸ்லிம் குடிமை மற்றும் மார்க்க தலை­மைகள் அர­சி­யலில் ஒரு பாத்­திரம் வகிக்க வேண்­டிய தேவைப்­பாட்டை வேண்டி நிற்­கி­றது.

முஸ்­லிம்­க­ளுக்கு சிந்­தனைத் தலை­மைத்­துவம் இல்­லா­மையும், குழு­நிலை வாதமும், கட்­சிகள் சமு­தாய நலன்­மீதும், பாது­காப்­பிலும் செலுத்தும் கரி­ச­னை­யை­விட தத்­த­மது கட்­சி­களின் நலனில் அதிக அக்­கறை காட்டிச் செயற்­ப­டு­வதும் முஸ்­லிம்­களின் ஒட்­டு­மொத்த அர­சியல் ஒப்­பு­தலைப் பெற்­றுக்­கொள்ள முடி­யாத துர­திஷ்­ட­மான நில­மைக்கு எம்மைத் தள்­ளி­யுள்­ளது.

பெரும்­பான்மை அர­சியல் தலை­மைத்­து­வங்கள் இன­ரீ­தி­யாக முஸ்­லிம்­க­ளுக்கு பங்கம் விளை­விக்கும் அல்­லது கணக்கில் எடுக்­காது விடும் அர­சியல் நிலைப்­பாட்டை எடுத்­தி­ருக்கும் இச்­சூ­ழலில் நாம் 25 ஆண்­டு­க­ளுக்கு முன் இருந்த களச் சூழ­லுக்கு ஏற்ற வகையில் அன்று எடுத்த சில அர­சியல் தீர்­மா­னங்­களை இன்றும் பிர­தி­யீடு செய்ய முற்­ப­டு­வது தற்­கா­லத்­துக்கு பொருந்தப் போவ­தில்லை.நமது தலை­வர்கள் சிலர் இன்றும் பழங்­காலக் கன­வு­லகில் மிதக்­கி­றார்கள்.

பெரிய கட்­சிகள் காலத்­துக்குக் காலம் தங்­க­ளுக்குத் தேவை­யான வகையில் முஸ்­லிம்­களை பயன்­ப­டுத்­து­கி­றார்கள். இனி­மே­லா­யினும், முஸ்லிம் தலை­வர்கள் இவ்­வாறு நம்மை பாவிப்­ப­தற்கு தங்­க­ளது முன் செய­லாற்றும் திறனை பெரிய கட்­சி­க­ளுக்கு பகிர்ந்­த­ளிக்­கா­தி­ருக்க வேண்டும்.வருமுன் காப்­போ­ராக இருக்க வேண்டும்.

பெருந்­த­லைவர் அஷ்ரஃப் 40 ஆண்­டு­க­ளாக இலங்­கையின் அர­சி­யலில் கவ­னிக்­காமல் விடப் பட்­டி­ருந்த முஸ்லிம் சமு­தா­யத்தை,1980 களின் இறுதிப் பகு­தி­யி­லி­ருந்து பெரிய கட்­சி­களால் ஏறெ­டுத்துப் பார்க்க வைத்தார்.

2015 வரை தாக்­குப்­பி­டித்த இந்த உருக்குத் தன்மை, 2016 இலி­ருந்து துருப்­பி­டிக்கத் தொடங்­கி­விட்­டது.

2017 இல் அர­சியல் சது­ரங்­கத்தில் தீவி­ர­மாக காய்கள் நகர்த்­தப்­பட போகி­றது.

1990 களில் இருந்து காய்­களை நகர்த்தும் தரப்­பு­களில் ஒன்­றாக இருந்த நாம், இனி வெட்டப்படும் காயாகவும் ஆகலாம்.காயா இல்லை காய்களை நகர்த்தும் கையா என்பதை நமது ஒற்றுமையே நிர்ணயிக்கும்.எந்தப் பெரிய கட்சியினதும் எடுபிடி அல்ல என்று நிரூபிக்க பெருங்கட்சிகளின் அடிமைத் தளையிலிருந்து நம்மைக் களைவோம், நமக்குள் இருக்கும் அரசியல் மற்றும் மார்க்க இயக்க வேறுபாடுகளை தற்காலிகமாகவேனும் ஒத்திப்போட விளைவோம், ஒரு கூட்டு முன்னணியாய் முகிழ்ப்போம்.

நாமும் எதிர்கலத்தில் அரசியல் அனுகூலத்தின் பங்காளிகளாகலாம்.காலம் பிந்தியிருப்பினும் இப்போதும் வருமுன் காக்கும் காலம் கடந்து விடவில்லை என மேலும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

எம்.எஸ்.எம்.நூர்தீன்

நன்றி – vidivelli