அபிவிருத்தித் திட்டங்களை அடுத்த வருடத்தில் ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சுகததாச விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற கொழும்பு மாடிவீடுகளில் உள்ள பயனாளிகளுக்கான வீட்டுக்கான உறுதிப்பத்திரங்களை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பிரதமர் உரையாற்றினார்.
இந்த நிகழ்வில் 3000 பேருக்கு வீட்டு உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டது. அரசாங்கம் தனது முதலாவது ஆண்டு காலப்பகுதியில் நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவற்காக நடவடிக்கையை மேற்கொண்டதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கும் தொழிற்சாலைகளை ஏற்படுத்துவதற்கும் துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதற்குமான அடிப்படை கடந்த வருடத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட பலவற்றை அமைப்பதற்காக பெறப்பட்ட கடனை திருப்பி செலுத்துவதற்கு இரண்டு வருட காலம் சென்றுள்ளது என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.