முன்னாள் ஜனாதிபதி காலம் சென்ற . பிரேமதாசவினால் ஆரம்பிக்கப்பட்ட ” செவன சரன தாபரிப்பு பெற்றோர் வீடமைப்பு திட்டம் மீள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வருமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்காக 14 நிர்மாணக் கம்பணிகள் 150 மில்லியன் ருபாவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மற்றும் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா் சஜித் பிரேமதாசவிடமும் கையளித்துள்ளன. ஒவ்வொரு நிறுவனமும் 25 வீடுகளை கொண்ட மாதிரிக் கிராமங்களை வருமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு இலவசமாக வீடுகளை நிர்மாணிக்கவே இந்த நிதியுதவி வழங்கப்பட்டது.
மேற்படி காசோலைகளை வழங்கும் நிகழ்வு நேற்று (20) நிர்மாணக் கம்பணிகளுக்கு தேசிய விருது வழங்கும் வைபவம் அமைச்சா் சஜித் பிரேமதாசா தலைமையில் பண்டாரநாயக்க ஞாபகாா்த்த சர்வதேச மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டாா். இந் நிகழ்வில் நாட்டின் பாரிய நிர்மாணங்களை மேற்கொள்ளும் நிறுவனங்கள் 1050 இலச்ச்ங்களுக்கான காசோலையை செவன சரன தபாாிப்பு வீடமைப்பு நிதியத்திற்கு வைப்பிடும் படி ஜனாதிபதியிடம் காசோலைகளை வழங்கினாா்கள். சி.எம். லிமிட்டெட், மாகா கம்பணி, ஜ.சி.சி, என்எம், நவலோக நிர்மாணக் கம்பனி. சீறா, துடா பிறதா்ஸ், என பல்வேறு கம்பனிகள் காசோலையை கையளித்தன.
இக் கம்பணிகள் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் கீழ் உள்ள இக்டாட் அதிகார சபையின் பாரிய நிர்மாண தரச் சான்றிதழ்களை பெற்ற கம்பணிகளாகும். இக்கம்பணிகளுக்கு சிறந்த நிர்மாணச் தரச் சான்றிதழ்களும் ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டது.
இத்திட்டத்திற்கு இந்நாட்டில் உள்ள ஏனைய நிர்மாணக் கம்பணிகளும் வறுமைக் கோட்டில் வாழும் கிராமிய மக்களது வீடமைப்புக் கிராமங்களுக்கு உதவுமாறு அமைச்சா் சஜித் பிரேமதாச வேண்டிக் கொண்டாா். இம் கம்பணிகளது வீடமைப்புக் கிராமங்கள் அடுத்த வாரமுதல் நாடு முழுவதிலும் ஒவ்வொரு வீடமைப்புத் திட்டத்திற்கும் வீடற்ற 25 குடும்பங்களைத் தெரிபு செய்து அவா்களுக்கு அரச காணி துண்டு 10 போ்ச் வழங்கப்பட்டு வீடுகள் நிர்மாணிக்கப்படும். அரசாங்க அதிபா்கள் அரச காணிகளை இவ் வீடமைப்புத்திட்டத்திற்காக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு வ விடுவிக்குமாறும் வேண்டிக் கொண்டாா்.