இலங்கையின் கல்வித்துறை அபிவிருத்தியில் பங்கு கொள்வது தொடர்பாக மலேசியாவின் “International University of Malaya – Wales ” மற்றும் “Vision College” ஆகிய பல்கலைகழகங்கள் “மட்டக்களப்பு கெம்பஸ்” தலைவரும் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வு டன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டது.
இன்று செவ்வாய்க்கிழமை மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சின் காரியாலயத்தில் நடைபெற்ற மேற்படி கலந்துரையாடலில் “International University of Malaya – Wales ” பணிப்பாளர் ஆந்தோனி மைக்கல் மற்றும் “Vision College” நிறைவேற்றுப் பணிப்பாளர் ஆண்ரியன் தோன்ங்; உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். .
இதன் போது, இலங்கையின் கல்வித்துறை அபிவிருத்தியில் பங்கு கொள்வதற்கு இவ்விரு பல்கலைகழகங்களும் விருப்பம் தெரிவித்ததுடன், மட்டக்களப்பு கெம்பஸ{டன் துறைசார்ந்த உறவுகளை பேணுவது தொடர்பிலும் இதன் போது விரிவாக ஆராயப்பட்டது.