சபையை அதிரவைத்த ஹிஸ்புல்லாஹ்வின் உரை..!

 
 
இஸ்லாத்துக்கு எதிராக செயற்படுபவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் அல்லது அவர்களை கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவதை யாராளும் தடுக்க முடியாது என இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் நாடாளுமன்றத்தில் கடுமையாக பேசியிருந்த நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ ஆகியோர் அமைச்சருடன் தனிப்பட்ட கலந்துரையாடலொன்றை மேற்கொண்டு சமரசப்படுத்தியுள்ளனர்.
 
hisbul
இராஜாங்க அமைச்சரின் உரை இடம்பெறும் போது நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உரையை கேட்டுள்ளதுடன் பின்னர் ஹிஸ்புல்லாஹ்வுடன் கலந்துரையாடியுள்ளார். 
இதன் போது, நடுநிலையாக சிந்திக்கக் கூடிய ஹிஸ்புல்லாஹ் இவ்வாறு காரசாரமாக உரையாற்றியதைப் பார்த்து தான் வியந்ததாகவும், முஸ்லிம்களது மனோநிலை தனக்கு நன்கு தெரியும். எனவே விரைவில் இப்பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவரிடம் உறுதியளித்துள்ளார்.  
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் மேற்படி வாக்குறுதியையே அவரிடம் வழங்கியுள்ளார். பின்னர், நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தனிப்பட்ட ரீதியில் இராஜாங்க அமைச்சுடன் முஸ்லிம்களது பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். 
இதன்போது, மட்டக்களப்பு சுமனரத்ன தேரரரை அடுத்த வாரம் மட்டு. சென்று தான் பேசுவதாகவும், முஸ்லிம்கள் இந்த விடயத்தில் சற்று பொறுமை காக்கும் படியும் கூறியுள்ளார். அத்துடன், நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிமை தனக்கும் – உங்களுக்கும் இடம்பெற்ற விவாதத்தின் போது கடந்த ஆட்சியில் இருந்த முஸ்லிம் அமைச்சர்கள் தெடார்பில் தான் வெளியிட்ட கருத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.