அமைச்சின் ஊடகப்பிரிவு
சமுர்த்தி வங்கிகளில் இஸ்லாமிய ஷரீஆ நடைமுறைகளை அறிமுகம் செய்து முஸ்லிம்களுக்கு இந்த வங்கித் திட்டத்தை உச்ச பயனை கிடைக்கச் செய்ய வழிவகுக்குமாறு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார்.
சமூக அபிவிருத்தி மற்றும் சமூக நலநோம்பு அமைச்சின் குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது.
கடந்த காலங்களில் சமுர்த்தித் திட்டம் இலங்கைகு அறிமுகப்படுத்தப்பட்ட போது அமைச்சராக இருந்து பல்வேறு பணிகளை மேற் கொண்ட அமைச்சர் எஸ். பி திஸநாயகா தற்போதும் பொருத்தமான அமைச்சுப் பதவி ஒன்றையே வகித்துவருகின்றார். அவரது பணிகள் சிறப்பானது.
அவர் தனது திறமைகளைப் பயன்படுத்தி வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்களை பொருளாதார நிலையில் ஸ்திரப்படுத்த அரும்பாடுபட்டார்.
கிராமிய மட்டத்தில் அவர் சமுர்த்தித் திட்டத்தை அறிமுகப்படுத்தி வெற்றியும் கண்டார். சமுர்த்தித் திட்டத்தை அவர் நடைமுறைப்படுத்திய அந்தக் காலத்தில் வடக்கு கிழக்கின் பல மாவட்டங்கள் யுத்தத்தின் நேரடிப் பிடியில் இருந்ததனால் சமுர்த்தித் திட்டத்தை அங்கே நடைமுறைப்படுத்த முடியாத துரதிஷ்டம் இருந்தது.
குறிப்பாக யாழ்ப்பாணத்தின் ஒரு பகுதி, வவுனியா வடக்குப் பிரதேசம், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களின் பெரும்பாலான பிரதேசங்களில் சமுர்த்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாத ழ்நிலை இருந்தது.
யுத்தம் முடிந்து சமாதானம் ஏற்பட்ட பின்னர் இந்தப் பிரதேசங்களில் அங்கு வாழ்ந்த மக்கள் மீண்டும் படிப்படியாக குடியேறி வாழ்ந்து வருகின்றனர். எனினும் கிராம சேவையாளர்களிடமிருந்து பெற்றுக் கொண்ட தரவுகளின் அடிப்படையில் இந்தப்பிரதேசங்களில் மீள்குடியேறி வாழும் மக்களின் மூன்றில் ஒரு பகுதியினருக்கே சமுர்த்தி கிடைத்துள்ளது. மீதி மூன்றில் இரண்டு பகுதியினரும் சமுர்த்திக்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்துவிட்டு ஒருவருட காலம் ஏக்கத்துடன் இருக்கின்றனர். யுத்தத்தினால் இந்தப் பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள் பாறிய அழிவுகளை சந்தித்தனர். இவர்களின் வாழ்க்கை G+ச்சியத்தில் இருந்தே தொடங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட இந்த மக்களுக்கு சமுர்த்தி வழங்கப்பட்டால் அவர்கள் தமது வாழ்க்கையில் ஈடேற்றம்பெற இது உதவியாக இருக்கும்.
வடக்கில் மாத்திரமின்றி கிழக்கிலும் நீடித்துள்ளது. எனவே அமைச்சர் எஸ் பி திசநாயக்க இந்த மக்களின் நலனில் அக்கறை கொண்டு செயற்பட வேண்டுமென நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். அத்துடன் கூட்டுறவுத் துறையானது எனது அமைச்சின் கீழே வருவதால் கூட்டுறவு வங்கிகளையும், சமுர்த்தி வங்கிகளையும் ஒருமித்து செயற்பட வைத்து மக்கள் பயனடைய வாய்ப்பளிக்க முடியும் வகையிலான அமைச்சர் எஸ் பியியன் நல்ல ஆலோசனைகளை ஏற்றுக் கொண்டு அதனைச் செயற்படுத்த நானும் சித்தமாய் இருக்கின்றேன் என தெரிவிக்கின்றேன்.