ஞானசார தேரரின் கெடுபிடிகள் நாளுக்கு நாள் அதிகமாகி வரும் சூழலில் அவரை நாய் கூட்டில் அடைப்போம் என்றவர்கள் சாதரண மனிதர்கள் பொலிஸ் நிலையம் ஏறி இறங்குவது போல் ஏறித் திரிகின்றனர்
இதற்காகதான் மக்கள் வாக்களித்து ஆட்சிபீடமேற்றினர் ஏன் அதிகார தலைவர்களுக்கு உரிய இடங்களில் பேசி தீர்வு காண முடியாது .
நாங்கள் மிகத் தெளிவாக இருந்தோம்.இது சர்வதேசத்தின் திட்டமிடலுடன் மிகப் பாரிய சதி செய்து இந்த நாட்டின் முஸ்லீம்களுக்கு எதிரான வித்து என்பதை கூறினோன் பணத்துக்காகவும் அதிகார கதிரைக்காகவும் ஆசை கொண்ட எம்மவர்கள் சூழ்ச்சிகளில் மூழ்கினர்.
இன்று எம் சமுகம் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு முக்கிய சூத்திரகாரிகள் இவர்கள் தான்
வரலாறு நெடுகிலும் சுயநல அரசியலுக்காக காட்டிக் கொடுப்புகள் இவ்வாறு தான்
நிகழ்ந்திருக்கிறது என்றார் , இன்று கிழக்கு வாசல் இல்லத்தில் இடம் பெற்ற மருதமுனை இளைஞர்களுடான சந்திப்பில் தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லாஹ் குறிப்பிட்டார் .
மேலும் அவர் கருத்து வெளியிடுகையில் ,
இந்த நாட்டின் ஸ்திரமற்ற தண்மை தொடர்பில் அணைவரும் கருத்து கூறுகிறார்கள் முஸ்லிம் மக்களை பகடைக்காய்களாக பாவித்து அரசியல் செய்து பழகிய தலைவர்கள் இது ஒரு தேர்தல் காலமென்றால் எவ்வாறு மேடைகளில் முழங்கி இருப்பார்கள் அதுதான் இன்று எமது சமுகத்தின் நிலை
புத்திசாதுர்யமாக சமுகம் எடுக்க வேண்டிய முடிவுகளை சுய நலத்திற்காக மாற்றி அமைக்கின்றவர்கள் தொடர்பில் அவதானமாக இருங்கள்.
பொதுபல சேனாவுக்கெதிராக நான் பாரளுமன்றத்தில் ஆற்றிய உரையின் அர்த்தம் எம் தலைவர்கள் என்று சொல்லுபவர்கள் புரிவதற்க்கு பல காலமெடுக்கும் என்றார்.