கல்லீரல் நலம் பாதிக்கப்பட்டிருந்தால் அதை எப்படி அறிவது?

நம் உடல் உள்ளுறுப்புகளில் முக்கியமான ஒன்று, கல்லீரல். உடலின் சீரான இயக்கத்துக்குப் பல வகைகளிலும் துணைபுரியும் முதன்மையான உறுப்புகளில் ஒன்றாக கல்லீரல் உள்ளது.

எனவே, கல்லீரலின் ஆரோக்கியத்தைக் காப்பது மிகவும் முக்கியம். ஆனால், கல்லீரல் நலம் பாதிக்கப்பட்டிருந்தால் அதை எப்படி அறிவது? கீழ்க்கண்ட அறிகுறிகள், கல்லீரல் பிரச்சினையைக் கூறும்.

வயிறு செரிமானம் தொடர்பாக நீடித்த பிரச்சினை இருந்து வந்தால் அது கல்லீரல் சேதத்துக்கான அறிகுறிதான். மிக இளவயதில் கர்ப்பம் தரிப்பது, மனச் சோர்வு போன்ற காரணங்களால் கூட கல்லீரல் பாதிப்படைய அதிக வாய்ப்பு இருக்கிறது.

24-1382613131-liver-cancer1-600

உடலும், மனமும் எப்போதும் ஒருவித களைப்பு மற்றும் மந்தமான நிலையில் இருந்து வந்தால் உடனே டாக்டரை அணுகுவது நலம். ஏனென்றால் அது கூட கல்லீரல் பாதிப்புக்கான அறிகுறிதான்.

பசி எடுக்காமலும், உடல் எடை திடீரென அதிக அளவில் குறைந்தாலும், கல்லீரலில் பிரச்சினை ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் இருக்கின்றன.

சிறுநீர் மஞ்சள் நிறமாக வெளியேறினால் அது கல்லீரல் பிரச்சினையை சுட்டிக் காட்டுவதாக அமையும்.

மலம் கழிக்கும்போது அதன் நிறம் பழுப்பிலிருந்து நல்ல மஞ்சளாகவோ, சாம்பலாகவே மாறியிருந்தால் கல்லீரலில் சேதம் இருப்பதாக அர்த்தமாகும்.

கடுமையான மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டு அதன் மூலம் கணையம், பித்தப்பை ஆகியவை பாதிப்படைந்தால் அது கல்லீரலையும் பாதிக்கும் வாய்ப்பு இருக்கிறது.

கீழ் வயிற்றில் தொடர்ந்து வலி இருந்து வந்தால் கல்லீரலில் சேதம் ஏற்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.

மேற்கண்ட அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக டாக்டரை அணுகி உரிய சிகிச்சை பெற்றுக்கொள்வது நலம்.