இப்றாஹிம் மன்சூர் : கிண்ணியா
நேற்று 03-12-2016ம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் றிஷாத் அமைச்சர் ஹக்கீமின் ஊடகங்கள் தன் மீது சேறு பூசுவதாக பகிரங்க குற்றச் சாட்டை முன் வைத்திருந்தார்.அமைச்சர் ஹக்கீமின் ஊடகங்கள் 02-12-2016ம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி எழுப்பிய வினாவை திருபுபடுத்தி செய்தி வெளியிட்டதை மையமாக கொண்டே இக் குற்றச் சாட்டை முன் வைத்திருந்தார்.பாராளுமன்றத்தில் நடந்த ஒரு விடயத்தின் திருபுபடுத்தலை பாராளுமன்றத்தில் வைத்துப் பேச தனி தைரியம் வேண்டும்.இதிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தியின் சந்தேகத்திற்கு அமைச்சர் றிஷாத் தெளிவான பதில் அளித்திருகின்றார் என்பதை அமைச்சர் றிஷாதின் குறித்த பதிலை அறியாதே ஊகித்து கொள்ளலாம்.
பாராளுமன்றத்தில் வைத்து அமைச்சர் ஹக்கீமின் பெயரை கூறி இதனை கூறும் போது அமைச்சர் ஹக்கீமிடமும் ஏனையவர்களிடமும் அங்குள்ளவர்கள் கேள்விகள் தொடுப்பார்கள்.அண்மைக் காலமாக அமைச்சர் ஹக்கீம் குறித்த சார்பு ஊடகங்களை இயக்குவர்களை ஊக்குவித்து வருவதற்கு பல ஆதாரங்கள் உள்ளன.குறித்த அமைச்சர் ஹக்கீமின் நுவரெலியா அழைத்து சென்றமை,முகநூலில் எழுதும் இவர்களை பெரும் இலக்கியவாதிகளாக அழைத்து இஸ்லாமிய இலக்கிய பொன் விழா வைத்து கெளரவிக்கின்றமை,அடிக்கடி கொழும்பிற்கு அழைத்து சந்திக்கின்றமை என அடுக்கிக் கொண்டே செல்லலாம்.இதன் காரணமாக அவர் தான் இதன் பின்னணியில் இல்லையென மறுப்பாராக அது மிகப் பெரும் பொய்.அதனை ஏற்றுக்கொள்ளுமளவு ஏனையவர்கள் மடையர்கள் அல்ல.இதன் காரணமாக அமைச்சர் ஹக்கீமின் இழி பண்பு புத்தி ஜீவிகளிடத்தில் புலனாகியிருக்கும்.அமைச்சர் ஹக்கீம் ஒரு கட்சி தலைவரின் நாகரீகமிக்க தரமிக்க பேச்சிலிருந்து படிப்படியாக தவரிக்கொண்டு செல்கிறார்.
புத்தளத்தில் பாயிசை வரவேற்கும் நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் ஹக்கீம் பாயிசை கட்சிக்குள் எடுப்பதற்கு மு.கா வாட்ஸ்அப் போராளிகள் தன்னிடம் பரிந்துரை செய்தார்கள் என குறித்த இணைய தளங்களை இயக்குபவர்களையே மையப்படுத்தி கூறியிருந்தார்.இது அமைச்சர் ஹக்கீம் வாட்ஸ்ப் போராளிகளுடன் மிக நெருக்கமான தொடர்பில் இருப்பதை அறிந்து கொள்வதோடு வாட்ஸ்அப்பில் மு.காவை பலப்படுத்த ஒரு குழுவை உருவாக்கி வைத்திருப்பதையும் அறிந்து கொள்ளலாம்.இதைத் தான் ஊடக மாபியா என்பார்கள்.அண்மைக் காலத்தில் குறித்த அமைச்சர் ஹக்கீமின் சார்பு ஊடகங்கள் அனைத்தும் பணம் செலுத்தப்பட்டு புரோமோட் பண்ணப்பட்டுள்ளமை இந்த ஊடக மாபியாவை உருவாக்க மு.காவினர் காட்டும் அக்கறையை எடுத்துக் காட்டுகிறது.ஒரு போதும் அமைச்சர் ஹக்கீம் இவற்றின் பின்னால் தானில்லையென மறுக்க முடியாது.
இவர்கள் அவர்களது கட்சியை வளர்க்கும் விதத்தில் செயற்பட்டால் அதனை யாருமே இகழப்போவதில்லை.ஒரு குறித்த விடயத்தில் தெளிவான ஆதாரங்கள் உள்ள நிலையில் பொய்களை கூறி மக்களை ஏமாற்றும் கேவலமான வேலை தான் பலராலும் முகம் சுழிக்கும் நிலைக்கு வந்துள்ளது.இவர்கள் அண்மைக் காலமாக வெளியிட்ட செய்தியில் “ஊழல் பெரிச்சாளி” என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்திருந்தார்கள்.இது ஊடக நாகரீகத்திற்கு அப்பாற் பட்ட ஒரு விடயம்,புத்தளத்தில் உரையாற்றிய அமைச்சர் ஹக்கீமும் நாகரீகம் தவறி நடந்தார்.இப்படி இருக்கும் போது அவரது போராளிகள் நாகரீகத்தை எதிர்பார்ப்பது தவறு.அமைச்சர் ஹக்கீம் தான் நாகரீகம் தவறியமை சாய்ந்தமருதில் வைத்து ஏற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதில் மிகக் கவலையான விடயம் என்னவென்றால் இப்படியான பொய்களை பரப்புபவர்களில் அதிகமானவர்கள் மிகவும் இளம் வயதினர்.இவர்கள் தவறான வழியில் பயணிப்பது எமது முஸ்லிம் சமூகத்திற்கு மிகவும் ஆபத்தான விடயம்.இவர்களுக்கு சரியான வழி காட்டல்களை மு.காவினர் வழங்க வேண்டும்.இவர்கள் பெற்றோர்களாவது இதனை கண்டிக்க வேண்டும்.இங்குள்ளவர்களில் அதிகமானவர்கள் தொழில் எடுக்கவே எந்த நிலைக்கும் இறங்க தயாராகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.