அமைச்சர் றிஷாதின் வளர்ச்சி மீது மு.காவினர் கொண்டிருக்கும் அச்சமே; அவதூறுகள் பரவக் காரணம்!

 

risad

 இப்றாஹிம் மன்சூர் : கிண்ணியா 

நேற்று 02-12-2016ம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற குழு நிலை விவாதத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி சதோச அரிசி கொள்வனவு தொடர்பில் எழுப்பிய விவாவை திருபுபடுத்தி சிலர் அமைச்சர் றிஷாதின் மீது களங்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர்.அக் குறித்த சம்பவம் தொடர்பில் வினா எழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தியே இது 2014ம் ஆண்டு இடம்பெற்ற சம்பவம் என்பதை அவரது உரையிலேயே குறிப்பிடுகிறார்.அதாவது அமைச்சர் றிஷாதின் கீழ் சதோச நிறுவனமானது வருவதற்கு முன்பாகும்.

இவ் வினாவிற்கு அமைச்சர் றிஷாத் பாராளுமன்றத்தில் வைத்தே தெளிவாக பதில் அளித்திருந்தார்.இதனை பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி எதுவித மறுப்புமின்றி ஏற்றுக்கொண்டிருந்தமையை குறித்த காணொளியை அவதானிக்கும் ஒருவர் அறிந்து கொள்ளலாம்.இது தொடர்பில் விமர்சனங்களை முன் வைக்கும் சிலர் அமைச்சர் றிஷாத் பதில் அளிக்க முடியாமல் பின் வாங்கியதாக கூறியுள்ளனர்.குறித்த அரிசி கொள்வனவின் மூலம் அரசு நஸ்டமடைந்தமை உண்மை.அதற்கு அதிகளவான அரிசியை இறக்குமதி செய்த அமைச்சர் தான் (ஜோன்சன் பெர்னாண்டோ) பதிலளிக்கும் கடப்பாடுடையவர்.உற்பத்தில் செய்யப்பட்ட அரிசியை குறித்த காலப்பகுதி வரை தான் மனித பாவனைக்கு பயன்படுத்த முடியும் என்பது சாதாரண விடயம்.அரிசி மனிதன் பயன்படுத்த முடியாத நிலைக்கு வரும் போது அதனை வேறு தேவைகளுக்கு பயன்படுத்தி வரக் கூடிய நஷ்டத்தை இயன்றவரை குறைப்பதே அறிவுடைமை.

இந்த வகையில் தான் அமைச்சர் றிஷாதின் வர்த்தக அமைச்சு குறித்த அரிசியை மனித பாவனைக்கு பயன்படுத்த முடியாதென்ற தெளிவான அங்கீகாரத்தை பெற்று முறையான கேள்விப்பத்திரம் (tender notice) கோரப்பட்டு வேறு பயன்பாட்டிகாக விற்றது.இவ்வாறான சந்தர்ப்பங்களின் போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.அனைத்து நடைமுறைகளும் சரியான விதத்தில் பின்பற்றப்படும் போது அங்கு ஊழல் நடப்பதற்கு வாய்ப்பில்லை.அரிசி மனித பாவனைக்கு உதவாத நிலைக்கு வரும் போது அதன் மூலம் கொள்வனவாளர் நஷ்டம் அடைவார்.இந்த நஷ்டத்தில் அமைச்சர் றிஷாத் ஒரு போதும் பங்கெடுக்க முடியாது.இருந்தாலும் இது அரசுக்கு ஏற்பட்ட மிகப் பெரும் நஷ்டம் என்பதால் இது தொடர்பில் பலரும் கரிசனை கொள்வதை தவிர்க்க முடியாது.

மேலும்,அமைச்சர் றிஷாதின் வர்த்தக அமைச்சு கொடுக்கல் வாங்கலுடன்  தொடர்புடைய அமைச்சு என்பதால் அதில் ஊழல் குற்றச் சாட்டுக்கள் அதிகம் முன் வைக்கப்பட வாய்ப்புள்ளது.அமைச்சர் றிஷாத் சதோச நிறுவனத்தை பொறுப்பெடுத்த பிறகு அந் நிறுவனம் துரித வளர்ச்சியை கண்டு பலரது பாராட்டையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் றிஷாத் முஸ்லிம் சமூகத்திற்காக தன்னை அர்ப்பணித்து செயற்படுவதால் அவரின் குரலை நசுக்குவதற்கு சிலரால் மேற்கொள்ளப்படும்  சூழ்ச்சிகளாகவும் இவ்வாறானவற்றை நோக்கலாம்.இந்த திருபுபடுத்தப்பட்ட செய்தியின் பின்னணியில் மு.கா ஆதரவாளர்கள் உள்ளமை நிரூபிக்கப்பட்டுள்ளது.எத்தனை தடைகள் வந்தாலும் அவற்றை தகர்த்தெறிந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் றிஷாத் முஸ்லிம் சமூகத்திற்கான போராட்டத்தில் சிறிதும் பின் வாங்க மாட்டார் என்பதில் ஐயமில்லை.இவ்வாறான விடயங்கள் அமைச்சர் றிஷாதின் வளர்ச்சி மீது மு.காவினர் கொண்டிருக்கும் அச்சத்தை வெளிப்படுத்துகிறது.இவ்வாறான பொய் பரப்புரைகளை கை விட்டு அமைச்சர் றிஷாதை போன்று நேர்மையான வழியில் அரசியல் செய்யுமாறு இவ்வாறான சூழ்ச்சிகளின் பின்னால் ஒழிந்திருப்போரை கேட்டுக்கொள்கிறேன்.