அமைச்சர் றிசாத் ஊழல் செய்தாரா ? நேற்று நாடாளுமன்றில் நடந்தது என்ன ? வீடியோ

  நேற்று 02-11-2016ம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற குழு நிலை விவாதத்தின் போது மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சதோச நிறுவன அரிசியில் இடம்பெற்ற நஷ்டம் தொடர்பில் வினா எழுப்பியிருந்தார்.இதன் போது அவர் எங்கும் அமைச்சர் றிஷாத் ஊழல் செய்ததாக குறிப்பிடவில்லை.குறித்த அரிசி கொள்வனவானது சதோச நிறுவனமானது அமைச்சர் றிஷாதின் அமைச்சின் கீழ் வருவதற்கு முன்பு இடம்பெற்ற சம்பவமாகும்.இதற்கு அமைச்சர் றிஷாதை ஒரு போதும் குற்றவாளியாக கூற முடியாது.இதனை பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி கூறிய போது அமைச்சர் றிஷாத் பாராளுமன்றத்தில் இருக்கவில்லை.

பாராளுமன்றத்திற்கு வந்த அமைச்சர் றிஷாத் அவருடைய வினாக்களுக்கு மிகவும் சிறந்த முறையில் பதில் வழங்கினார்.தான் எப்போது சதோச நிறுவனத்தை பாரம் எடுத்தேன்.குறித்த அரிசியானது யாருடைய காலத்தில் எவ்வளவு கொள்வனவு செய்யப்பட்டது? எவ்வளவு எஞ்சியிருந்தது? என்ற புள்ளி விபரங்களோடும் குறித்த அரிசிகளுக்கு என்ன நடந்தது? தான் ஏன் அப்படி நான் செய்தேன்? என்பதையெல்லாம் தெளிவாக முன் வைத்தார்.அவர் தனது பதிலில் அவர் செய்த அனைத்து செயற்பாடுகளுக்கும் முறையான அனுமதிகளை பெற்றிருந்தமையை எதுவித சிறு தயக்கமுமின்றி தெளிவாக எடுத்துரைத்திருந்தார்.இதனை பாராளுமன்றத்தில் இருந்த அனைவரும் சிறிதும் மறுதலிக்காது செவியுற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது..

இதனை அறை குறையாக அறிந்த மு.காவின் போராளிகள் சிலர் அமைச்சர் றிஷாத் ஊழல் செய்ததாக பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி பாராளுமன்றத்தில் வைத்து கூறியதாக சமூக வலைத்தளங்களில் கூறித் திரிகின்றனர்.அவர் பதில் அளிக்க முடியாமல் திணறியதாகவும் இது தொடர்பில் FCIDயில் விசாரணை இடம்பெறுவதாக கூறி அமர்ந்து கொண்டதாகவும் கதைகளை பரப்பித் திரிகின்றனர்.அமைச்சர் றிஷாத் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தியின் வினாவிற்கு பதில் அளித்துவிட்டு சக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் வேண்டுகொளிற்கு சிரித்துக்கொண்டே பதில் வழங்குவதை குறித்த பேச்சை அவதானிக்கும் போது அறிந்து கொள்ளலாம்.

இது போன்றவை அமைச்சர் றிஷாதின் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள இயலாமல் மு.காவினர் சிலர் செய்யும் கையாலாக செயலாகும்.இவர்களுக்கு அமைச்சர் ஹக்கீமின் அங்கீகாரம் இருப்பது தான் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விடயமாகும். 

 

இப்றாஹிம் மன்சூர்,கிண்ணியா