ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமான திமுக.,வினர் கைது !

ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்திய திமுக பொருளாளர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக.,வினர் கைது செய்யப்பட்டுள்ளனர்

stalin85322-600-22-1471839201ரூ.500, 1000 நோட்டுக்களை வாபஸ் பெறுவதாக மத்திய அரசு நவ.8 ம் தேதி அறிவித்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மத்திய அரசை கண்டித்து எதிர்க்கட்சிகள் சார்பில் நாடு தழுவிய பந்த்திற்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

இதன் ஒரு பகுதியாக சென்னை ராஜாஜி சாலையில் இந்தியன் வங்கி முன்பு திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. திமுக பொருளாளர் ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான திமுக.,வினர் கலந்து கொண்டனர். இந்நிலையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமான திமுக.,வினர் கைது செய்யப்பட்டனர்.