தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா, தற்போது நல்ல நிலையில் உள்ளார். அவர் விரும்பும் போது வீட்டுக்கு செல்லலாம் என அப்பல்லோ குழும தலைவர் பிரதாப்ரெட்டி கூறினார்.
இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் பேசுகையில் ;
முதல்வர் ஜெயலலிதாவுக்கு இப்போது தீவிரமான பிரச்சனை ஏதுமில்லை. ஆதலால் அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு அனைத்து உறுப்புகளும் நல்ல முறையில் செயல்படுகிறது. பிஸியோதெரபி சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த சிகிச்சை மூலம் அவர் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார். ஜெயலலிதா மன வலிமை கொண்டவர். இது அவரது வேகமான உடல் நலத்திற்கு உதவியது.
வீட்டுக்கு அவர் எப்போது செல்ல வேண்டும் என விரும்புகிறாரோ அப்போது செல்லலாம். இவ்வாறு அவர் கூறினார்.