மெக்சிகோ அருகே 7.2 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது !

earthquakes-header

 

மெக்சிகோ அருகே பசிப்பிக் கடலில் நிகாராகுவா, எல்சால்வேடர், கோஸ்டாரிகா மற்றும் கவுதமலா ஆகிய குட்டி நாடுகள் உள்ளன. இவை மத்திய அமெரிக்க நாடுகள் என அழைக்கப்படுகின்றன.

இந்த நிலையில் நிகாரகுவா, எல்சால்வேடர் மற்றும் கோஸ்டாரிகாவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்கு 7.2 ரிக்டரில் நில நடுக்கம் பதிவானது.

எல்சால்வேடரை மையமாக கொண்டு இது ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் அங்கு வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்தன. ஆனால் அதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாக வில்லை.

இதற்கிடையே அப்பகுதியில் ‘ஓட்டோ’ என்ற சூறாவளிப்புயலும் வீசியது. மணிக்கு 175 கி.மீட்டர் வேகத்தில் வீசியதால் கடலில் கொந்தளிப்பு அதிகமானது. அதிக அளவில் அலைகள் எழும்பின.

இதனால் அந்த நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. கடற்கரை பகுதியில் பொது மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

ஆனால் பாதிப்பு எதுவும் இல்லாததால் சிறிது நேரத்தில் சுனாமி எச்சரிக்கை விலக்கி கொள்ளப்பட்டது. ஆனால் நிகாரகுவா நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான உத்தரவை அந்நாட்டு அதிபர் டேனியல் ஓர்டெகா பிறப்பித்துள்ளார்.

கோஸ்டாரிகா நாட்டில் சூறாவளிப் புயல் தாக்கம் இருந்தது. அதனால் ஏற்பட்ட மழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அபாயம் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.