2017ல், ‘வெஸ்பா எலக்ட்ரிகா’ என்ற மின்சார ஸ்கூட்டர் அறிமுகம் !

ஸ்கூட்டர் என்ற ஒரு இனத்தையே உருவாக்கிய முன்னோடிகளில் ஒன்று இத்தாலி நிறுவனமான, ‘பியாகியோ.’ அதன் தயாரிப்பான, ‘வெஸ்பா’ அழகிய வடிவமைப்புக்கு பெயர் பெற்றது. இன்றும் கூட ஸ்கூட்டர் என்றாலே வெஸ்பா தான் என்று சொல்லும் தீவிர ரசிகர்கள் அதற்கு உண்டு.  வெஸ்பா, 2017ல், ‘வெஸ்பா எலக்ட்ரிகா’ என்ற மின்சார ஸ்கூட்டரை முதல் முறையாக அறிமுகப்படுத்த இருக்கிறது.

tamil_news_large_1650667_318_219

இத்தாலியிலுள்ள, இ.ஐ.சி.எம்.ஏ., என்ற நிறுவனத்தின் மின் மோட்டார் தொழில்நுட்பத்துடன் எலக்ட்ரிகா வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘உலகின் மிகச் சிறந்த மின்சார தொழில்நுட்பத்துடன், வெஸ்பாவின் அசத்தலான வடிவமைப்பும் சேர்ந்ததாக,எலக்ட்ரிகா இருக்கும்’ என, அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது. ஒரிஜினல் வெஸ்பா, 1946ல் சாலைக்கு வந்தது. அதன் விற்பனை படிப்படியாக வேகமெடுத்து, 1960 வாக்கில், 20 லட்சம் வெஸ்பாக்கள் விற்பனையாயின. இதுவரை, உலகெங்கும், 1.8 கோடி வெஸ்பாக்கள் விற்பனையாகியுள்ளன.

 

இதில் கடந்த, 10 ஆண்டுகளில் மட்டும் கண்ட விற்பனை, 15 லட்சம். இந்தியாவில் பஜாஜ் ஆட்டோவின் கூட்டணியுடன், 1960ல் வெஸ்பா நுழைந்தது. பின், 1983ல் கான்பூரைச் சேர்ந்த, எல்.எம்.எல்.,லின் கூட்டுறவுடன் வெஸ்பா விற்பனையானது. 2006ல் எல்.எம்.எல்.,லிடமிருந்து விலகியது. 2012 முதல் மஹாராஷ்டிராவிலுள்ள பாராமதி தொழிற்சாலையிலிருந்து, சொந்தமாக வெஸ்பா மாடல்களை தயாரித்து வருகிறது வெஸ்பா.