பலாத்காரமாகவேனும் புதிய கட்சியின் தலைமைப் பதவியை மஹிந்தவுக்கு பெற்றுக் கொடுப்பேன் !!

மஹிந்த ராஜபக்ஷவின் எதிர்பார்ப்புக்கள் “ஸ்ரீலங்கா பொதுசன முன்னணி” புதிய கட்சியினூடாக நிறைவேறும் என்று முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறினார். 

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுசன முன்னணியின் முதலாவது ஊடக சந்திப்பில் பசில் ராஜபக்ஷ இதனைக் கூறினார். 

basil-rajapaksa-640x400

கட்சியின் தலைமைக்கு தகுதியானவர் மஹிந்த ராஜபக்ஷ என்றும், அந்தப் பதவியை பலாத்காரமாகவேனும் அவருக்கு பெற்றுக் கொடுப்பதாகவும் பசில் ராஜபக்ஷ கூறினார். 

“தாமரை மொட்டு” சின்னத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுசன முன்னணி என்று புதிய கட்சியின் அனைத்து பதவி வெற்றிடங்களும் நாளடைவில் நியமிக்கப்படும் என்றும், கட்சித் தலைவர்கள் கூட்டாக சேர்ந்து நியமிக்கப்படும் என்றும் அவர் இங்கு குறிப்பிட்டார். 

நாடு பூராகவும் உள்ள கிராம சேவகர் பிரிவுகளில் கிளைகள் உருவாக்கப்பட்டு அதனூடாக உறுப்பினர்கள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்றும் பசில் ராஜபக்ஷ கூறினார். 

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி போன்ற பிரதான கட்சிகள் உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளில் இருந்தும் அரசியல்வாதிகள் உட்பட பலர் புதிய கட்சியுடன் இணைந்து கொள்ள இருப்பதாக அவர் இங்கு குறிப்பிட்டார். 

அத்துடன் இந்தக் கட்சிக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இதயப் பூர்வமான ஆதரவு வழங்குவதாகவும் அவர் கூறினார்.