எம் தேசியத் தலைமை அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் அவர்களின் கரத்தை பலப்படுத்த இளைஞர்களாகிய நாம் ஒன்றுபடுவோமாக!

ACMC-logoஅகில இலங்கை மக்கள் காங்கிரஸில் மேலும் பல இளைஞர், யுவதிகள் மற்றும் அங்கத்தவர்களை இனைத்துக் கொள்ளும் முகமாக எமது தேசியத் தலைவரின் வேண்டுகோளுக்கு அமைவாக,  கட்சியின் பிரதித் தலைவரும், சாய்ந்தமருது மற்றும் அம்பாறை மாவட்ட அமைப்பாளரும், இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமான ஏ.எம்.ஜெமீலின் நெறிப்படுத்தலில், இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் அமைச்சின் தொடர்பாடல் அதிகாரியும், அதன் தலைவர் ஜெமீலின் செயலாளரும், MYSRO அமைப்பின் ஆலோசகருமான  ஏ.எல். ஜஹானின் தலைமையில், கட்சியின் காரியாலயத்தில் இடம் பெற்றது 

 

இந்நிகழ்வில் கட்சியின்  இளைஞர் அணியின்  முக்கியஸ்தகர்களான சகோதரர் அல் மஞ்முல் இஸ்லாமி கழகத்தின் உயர்பீட உறுப்பினரான RM. ஹனீஸ்,  சாய்ந்தமருது ஜீனியஸ் கழகத்தின் தலைவரும், சர்வதேச பொதுநலவாய இளைஞர் மன்றத்தின் உறுப்பினருமாகிய ZM. சாஜீத், முஸ்லிம் இளைஞர் சமூக ஆய்வு மையத்தின் (MYSRO) தலைவரும், இளைஞர் சம்மேளனத்தின் பிரதித் தலைவருமாகிய MIM. இக்தார், முன்னால் இளைஞர் பாராளமன்ற உறுப்பினரும், லீடர் அஷ்ரப் இளைஞர் கழகத்தின் தலைவரும், இளைஞர் சம்மேளனத்தின் தலைவருமாகிய AM. டில்ஷாத், அல் மஞ்முல் இஸ்லாமி கலகத்தின் உயர்பீட உறுப்பினரும், கட்சியின் மாளிகைகாடு அமைப்பாளருமான ARM. பஸ்மீர், இளைஞர் சம்மேளன உறுப்பினரும், Blue மீன் இளைஞர் கழகத்தின் உப செயலாளரும், கட்சியின்எதிர்கால இளைஞர் பாராளமன்ற வேட்பாளருமாகிய FM. டில்ஷாத், இளைஞர் சம்மேளனத்தின் ஆலோசகரும், மியன்டாட் இளைஞர் கழகத்தின் தலைவரும், இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தின் ஆலோசகரும், சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தருமாகிய AM.ஜஹான், ஒல்லாந்தர் இளைஞர் கழகத்தின் தலைவரும்,  ஹொலி ஹீரோஸ் கழகத்தின் நிறுவாக சபை உறுப்பினருமாகிய RM. தானீஸ், இளைஞர் சம்மேளனத்தின் செயலாளரும், ஹாஜியார் விளையாட்டு கழகத்தின் செயலாளருமான SM. இம்தாத்,  சண்பிலவர் விளையாட்டு கழகத்தின் தலைவர் AS. அஸ்வர், முஸ்லிம் இளைஞர் சமூக ஆய்வு மையத்தின் (MYSRO) உயர்பீட உறுப்பினரான AAA. சிஜாப்,  மற்றும் கட்சியின் சாய்ந்தமருது மத்திய குழு முக்கியஸ்தரும், கல்முனை மாநகரசபை உத்தியோகத்தருமாகிய LM. சாதீக் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

 

இன்ஷா அல்லாஹ் முக்கிய பல ஆயிரம் இளைஞர் யுவதிகளை கட்சியில் இனணத்துக் கொள்ளும் முகமாக இவ் இளைஞர் குழாம் தலைவர்களுக்கிடையில் கட்சியின் அங்கத்துவப்படிவமும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்  முஸ்லிம் சமூகத்திற்காக இரவு பகலாக மாவீரனாக மறைந்த தலைவர் MHM. அஷ்ரப் போன்ற எம் தேசியத் தலைமை அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் அவர்களின் கரத்தை பலப்படுத்த இளைஞர்களாகிய நாம் ஒன்றுபடுவோமாக.
 

  இஸ்மாயில் இக்தார்