2017ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் இந்த வரவு செலவுத்திட்டம் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இது இலங்கையின் 70ஆவது வரவுச் செலவு திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த வரவுசெலவுத்திட்டத்தின் மீதான விவாதங்கள் நாளை முதல் 26 நாட்களுக்கு நடைபெற உள்ளதோடு டிசம்பர் 10ஆம் திகதி வாக்கெடுப்பு நடைபெறும்.
மேலும், 2017ஆம் ஆண்டுக்கான செலவு 1819.5 பில்லியன் ரூபா என அரசாங்கம் மதிப்பீடு செய்துள்ளது.
அதில் 1208 பில்லியன் ரூபா மீண்டெழும் செலவுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது, பாதுகாப்பு செயற்பாடுகளுக்காக 284 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
கல்விக்காக 77 பில்லியனும், உயர் கல்விக்காக 163 பில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளன.
நாட்டிலுள்ள சகல மக்களினதும் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுகின்ற நீண்ட கால வேலைத்திட்டத்துடன் கூடிய அபிவிருத்திக்கான வரவுசெலவுத்திட்ட யோசனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக நிதி அமைச்சர் கூறியுள்ளார்.
குறித்த வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீட்டு சட்ட மூலம் ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.