வெளிநாட்டமைச்சர் மங்கள சமரவீர நாட்டில் பௌத்த தீவிரவாதமும், முஸ்லிம் தீவிரவாதமும் தலைதூக்கியுள்ளதாகத் தெரிவித்தார். அவர் தனது உரையில் ‘முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக்காலத்தில் செயற்பட்டுவந்த பௌத்த தீவிரவாத குழுக்கள் மீண்டும் தலைதூக்கியுள்ளன.
அதேபோன்று இதற்கு ஏட்டிக்குப் போட்டியாக ஒரு முஸ்லிம் தீவிரவாத குழுவும் இறங்கியுள்ளது. இக்குழுக்கள் அரசின் ஸ்திரத்தன்மையை இல்லாமற் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.
ஒரு முஸ்லிம் தீவிரவாத குழு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளது. அரசுக்கு விரோத அறிக்கைகளை வெளியிட்டுவருகிறது. இக்குழுக்களுக்கு இடமளிக்கப்படமாட்டாது என்றார்.