வை. எல். எஸ். ஹமீத் தனது வக்கிர புத்தியை இனிமேலாவது விட்டுவிட வேண்டும்.!

collage_fotor-2

ஜுனைதீன் மான்குட்டி 

தான் பிறந்து வளர்ந்த கல்முனை மண்ணில் சில நூறு வாக்குகளைக் கூட பெற்றுக் கொள்ள வக்கில்லாத வை எல் எஸ் ஹமீத், அமைச்சர் ரிஷாட் பதியுதீனை விமர்சிப்பதற்கு எந்தவிதமான அருகதையும் அற்றவர். சமூக வலைத்தளங்களிலும் முகநூல்களிலும் தன்னைப் பிரபல்யப்படுத்துவதற்காக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக புதுப்புதுக் கதைகளைக் கூறி மக்களை பிழையான வழியில் இட்டுச்செல்ல அவர் முயற்சிக்கின்றார்.

 அமைச்சர் ரிஷாட்டின் அரசியல் எதிரிகளுக்கு தீனி போடுவதன் மூலம் தனது வயிற்றை வளர்க்க முடியுமென பகற்கனவு காண்கின்றார். 

கடந்த பொதுத்தேர்தலில் மக்கள் காங்கிரஸ் சில ஆயிரம் வாக்குகளால் தோல்வியடைந்தமைக்கு வை எல் எஸ்ஸின் திருகுதாளங்களே காரணம். அம்பாறையில் மயில் சின்னத்தில் முஸ்லிம் ஒருவர் வென்றுவிட்டால் தனது தேசியப்பட்டியலுக்கு ஆபத்து என இவர் உணர்ந்தார். இதனால் தான் தேர்தல் காலங்களில் முஸ்லிம் காங்கிரஸுடன் கள்ள உறவு வைத்து மக்கள் காங்கிரஸின் பிரசார உத்திகளை தெரியப்படுத்தி அக்கட்சியின் வாக்கு வங்கியை உடைத்தெறிவதற்கு சதி செய்தார். மொத்தத்தில் இவர் கட்சிக்கான செயலாளராக பணியாற்றுவதை விடுத்து சகுனி வேலையே செய்தார். 

கட்சியின் செயலாளர் என்பவர் வெறுமனே அறிக்கை விடுபவராக இருக்க முடியாது. தேர்தல் காலம் நெருங்க நெருங்க வீட்டிலே கும்பகர்ணன் போல படுத்துறங்குபவன் செயலராக இருக்கவும் முடியாது. இவரின் உள்நோக்கம் வேறாக இருந்ததனால் தான் கபட நோக்கில் செயற்பட்டார். 

கட்சித்தலைவர் இவர் மீது கொண்ட நம்பிக்கைக்குப் பாத்திரமாக கட்சி யாப்பை தனக்கேற்றால் போல் வரைந்தவரே இந்தக் கயவர் வை எல் எஸ். பொதுவாக இவர் ஒரு நம்பிக்கைத் துரோகி. 

மக்கள் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் வை எல் எஸ் எப்போது எங்கள் கட்சியை விட்டு தூரமானாரோ அன்று தொடக்கம் நாம் பிறந்த அம்பாறை மண்ணுக்கு ஒரு பொற்காலம் தொடங்கியது. 

அமைச்சர் ரிஷாட் முன்னர் பல்வேறு அமைச்சுப்பதவிகளை வகித்திருந்த காலத்தில் எப்போதாவது அமைச்சரிடம், செயலாளரென தம்பட்டம் அடித்துவரும் வை எல் எஸ் அம்பாறையின் அபிவிருத்தி தொடர்பில் ஒரு துளி அளவேனும் அக்கறையுடன் கதைத்திருப்பாரா? 

தனக்கு தலைவர் பதவி கிடைத்துவிட்டால் போதுமென்ற நினைப்பில் புடவைக் கைத்தொழில் திணைக்களம், கப்பல் கூட்டுத்தாபனம், லங்கா அசோக் லேலண்ட் ஆகியவற்றில் பதவிகளை எடுத்துக் கொண்டு கொழும்பில் சுக போக வாழ்க்கையை மேற்கொண்டவர் தான் இந்த ஹமீத். 

அமைச்சர் ரிஷாட் வன்னியில் எம் பியாகி, கபினட் அமைச்சராக இருக்கின்றார். கட்சியின் தலைமைப் பொறுப்பை வழி நடத்தும் அவர் தேசிய ரீதியான பணிகளை முன்னெடுக்கின்றார். அவர் தலைமை தாங்கும் அரசியல் கட்சி ஆட்சியின் பங்காளியாக இருக்கின்றது. அது மட்டுமன்றி 500 உலக பிரபல்யங்களில் அமைச்சர் ரிஷாட்டும் அடங்குவதாக கடந்த வருடம் சர்வதேச அமைப்பொன்று அறிவித்தது. மக்களும் அமைப்புக்களும் அமைச்சர் ரிஷாட்டுக்கு புகழாரம் சூட்டுகின்றனவே ஒழிய அவர் ஒரு போதும் தன்னை ஒரு பெருமையாக கருதியதில்லை. இறைவனுக்கு பொருத்தமாகவே அவரது செயற்பாடுகள் அமைகின்றன. 

வை எல் எஸ் ஐ போன்று அவர் ஒரு போதும் பதவிகளுக்காகவும் அற்ப சொற்ப சலுகைகளுக்காகவும் ஆலாய்ப் பறந்தவருமல்ல.