தற்காலிகமாக வழங்கிய கொடுப்பனவும் நிறுத்தப்பட்டுள்ளதைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் !

img_1844ஏ.எஸ்.எம்.ஜாவித்

 

இராணுவத்தில் இணைந்து நாட்டின் வெற்றிக்காக யுத்தத்தில் ஈடுபட்டபோது அங்கவீனமடைந்து ஓய்வு பெற்ற 12 வருடங்களுக்கு உட்பட்ட காலத்தில் சேவையைக் கொண்ட இவர்களுக்கு தற்காலிக கொடுப்பனவு ஒன்று கொடுத்து வந்ததாகவும், தமக்கு ஓய்வூதியம் தருவதாகக் கூறி அவர்களது ஆவணங்களை எல்லாம் உரியவாறு சமர்ப்பித்தபோதும் இன்று வரை அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்றும் தற்காலிகமாக வழங்கிய கொடுப்பனவும் நிறுத்தப்பட்டுள்ளதைக் கண்டித்து தமது ஓய்வூதியத்தினை உடன் தருமாறு கோரி அங்கவீனமடைந்த இராணுவ அமைப்பு யு.டி. வசந்த தலைமையில் கொழுப்பு கோட்டை புகையிர நிலையத்திற்கு அருகாமையில் கடந்த 5 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாடளாவிய ரீதியில் சுமார் 2500 க்கும் மேற்பட்டோர் இந்தப் பிரிவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவும் இவர்களைச் சந்தித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

img_1869

img_1841