வர்த்தக கைத்தொழில் அமைச்சு மூலமாக மாவட்டத்திற்கு 1050 மில்லியன் ரூபாய்களை சென்ற வரவு செலவுத் திட்டத்தில் மாவட்ட கைத்தொழில் சமூகத்திற்காகவும், இளைஞ்ஞர்- யுவதிகளின் தொழில் வாய்புக்களை வழங்குவதற்காகவும், அ.இ.ம.கா.கட்சியின் சத்திய தேசிய தலைவர் றிஷாட் அமைச்சர் அவர்களின் முயற்சியினால் ஒரு கைத்தொழில் பேட்டை உருவாக்க சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் பட்டது.
இதனால் போலும், எமது கட்சியின் பிரதி தவிசாளரும், உயர்பீட உறுப்பினரும், அரச லக்சல நிறுவனத்தின் தலைவருமான, VC இஸ்மாயீல் அவர்களின் பெரும் முயற்சியினால் சம்மாந்துறை ப.நோ. கூ.சங்கத்தின் 25 ஏக்கர் காணியை, சபையின் தீர்மானத்தோடு எழுத்து மூலமாக பெற்றும் கொண்டார்.
இதனை கைத்தொழில் வர்த்தக அமைச்சின் உயர் அதிகாரிகளும் பார்வை இட்டு இது கைத்தொழில் பேட்டைக்கு பொருத்தமான இடம் என்றும் அத்தாட்சிப் படுத்தப் பட்டது.
இதன் பிறகு என்ன நடந்தது ?
மேற்படி 25 ஏக்கர் காணியை அம்பாரை அரசாங்க அதிபரிடம் அனுமதி கோரி அமைச்சின் செயலாளர் எழுத்து மூல கோரிக்கையைக் கேட்டிருந்தார், பின் அரச அதிபரிடம் இருந்து அமைச்சுக்கு பதில் பறந்தது.
அதாவது ,
” ஹக்கீம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர், சம்மாந்துறை அபிவிருத்திக் குழு தலைவர் கெளரவ பா.உ. மன்சூர் அவர்களின் எதிர்ப்பும், அதற்கு அரச அதிபர் ஒரு இன்சி காணி கூட இத் திட்டத்திற்கு வழங்கக் கூடாது என்று சென்ற மார்ச் மாதம் அறிவுறுத்தல் கொடுக்கப் பட்டு அந்த 25 ஏக்கருக்கு தடையும் விதிக்கப்பட்டது.
மேற்குறிப்பிட்ட சம்பவம் பிற்போட்டதன் காரணத்தினால் 2000 பேருக்கான தொழில் வாய்ப்புக்கள் இல்லாதொழிக்கப்பட்டதுடன் 10 க்கு மேற்பட்ட முதலீட்டாளர்களும் மட்டகளப்பு, திருகோனமலை நோக்கி நகர்ந்துள்ளனர்.
இவ்வாறே, இந்த ஹக்கீம் காங்கிரஸ் கட்சி நிர்வாகம் கடந்த 16+1 வருடமாக இந்த மாவட்ட அபிவிருத்திகளை தடை செய்து, மக்களை அராஜக அரசியலுக்கு இட்டுச் சென்றுள்ளது. இதன் மூலமாக நீங்கள் இளைஞ்ஞர்களை சுதந்திரக் காற்றை சுவாசிக்க புறப்பட வைத்துள்ளது,
இதன் மூலம் டயஸ்போரா, நோர்வே போன்ற திட்டமிடலாளர்கள் முகத்த்திரைகள் கிளிக்கப் படும் இன்ஷா அல்லாஹ்….
அல்லாஹு அக்பர்….
இவ்வாறன கைத்தொழில் பேட்டையை உருவாக்க தடைகளை மேற் கொள்ளும் ஹக்கீம் காங்கிரஸ் வாதிகளுக்கு சம்மாந்துறை மண் கல்வியாளர்களும், உலமாக்களும்,
இளைஞ்ஞர்களும் காட்டப் போகும் சகிம்சைதான் என்ன?
இளைஞ்ஞர் – யுவதிகளே!
உங்களது எதிகாலத்தில் விளையாடும் ஹக்கீம் காங்கிரஸ் அமைச்சர் கெளரவ ஹக்கீம் அவர்களிடம் நீங்கள் சொல்லப் போகும் செய்திதான் என்ன?
25 டிசம்பருக்கு முன் காணியை பெற்றுக் கொடுக்காது போபானால்,
பணம் மீளப் பெறப்படும் என இலங்கை திரைசேரி எச்சரிக்கை வெளி இட்டுள்ளது.
இது சம்பந்தமாக மாவட்டம் முழுவதும் “கைத்தொழில் பேட்டைக்கான” தடைகள் யார்?
இதன் மர்மம் என்ன?
என்பதனை தெளிவூட்டும் செயல்-அமர்வுகளை அம்பாரை மாவட்ட ACMC இளைஞ்ஞர் சம்மேளனம் மேற்கொள்ளும்.
ஆதாரங்களுடன்….
ஜுனைடீன் மான்குடி,
மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளர்,
உயர்பீட உறுப்பினர்,
அமைச்சரின் மாவட்ட இனைப்பாளர்,
முதலீட்டு ஊக்குவிப்பு இனைப்பாளர்,
jdeen.epbs@gmail,
0776228030.