மத்­திய வங்கி விவகாரம் -ரணில் உட்பட மூவர் விரைவில் கைது செய்யப்பட வேண்டும் !

ministerranil1_fotor-1மத்­திய வங்கி பிணை முறி மோச­டி­யுடன் தொடர்­பு­டைய குற்­றச்­சாட்டின் கீழ் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க,  மத்­திய வங்­கியின் ஆளுநர் முன்னாள் அர்­ஜுன மகேந்­திரன் மற்றும் நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க ஆகிய மூவ­ரையும் கைது செய்து சட்ட நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளு­மாறு இணைந்த எதிர்க்­கட்­சியைச் சேர்ந்த பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் 11 பேர் நேற்று இலஞ்ச ஊழல் ஆணைக்­கு­ழுவில் முறைப்­பாடு ஒன்­றினைக் கைய­ளித்­துள்­ளனர்.

மத்­திய வங்­கியின் முன்னாள் ஆளுநர் அர்­ஜுன மகேந்­திரன் தற்­போது வெளி­நாட்டில் இருப்­பதால் அவர் நாடு திரும்பும் போது விமான நிலை­யத்­திலே கைது செய்­யு­மாறும் அவர்கள் முறைப்­பாட்டில் தெரி­வித்­துள்­ளனர்.

இம்­மு­றைப்­பாட்­டினை இணைந்த எதிர்க்­கட்சிப் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கெஹ­லிய ரம்புக் வெல்ல, மஹிந்­தா­னந்த அளுத்­க­மகே, பந்­துல குண­வர்­தன, வாசு­தேவ நாண­யக்­கார, ஜனக பண்­டார தென்­னக்கோன், விதுர விக்­ர­ம­நா­யக்க, தாரக பால­சூ­ரிய உட்­பட 11 பேர் கைய­ளித்­தனர்.

இது தொடர்பில் இணைந்த எதிர்க்­கட்­சியைச் சேர்ந்த பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பந்­துல குண­வர்­தன கருத்து தெரி­விக்­கையில் கோப்­குழு அறிக்­கையின் மூலம் மத்­திய வங்­கியின் பிணை­முறி விவ­கா­ரத்தில் ஊழல் நடந்­துள்­ளமை நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளது.

இதற்கு மத்­திய வங்­கியின் ஆளுநர் நேர­டி­யாகப் பொறுப்புக் கூற­வேண்டும் எனவும்  அவ­ருக்கும் மத்­திய வங்­கியின் சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­க­ளுக்கும் எதி­ராக நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிக்­கையில் பரிந்­துரை செய்­யப்­பட்­டுள்­ளது.

நாட்டை பாரிய நிதி­நெ­ருக்­க­டிக்குள் தள்­ளி­விட்­டுள்ள மத்­திய வங்­கிப்­பி­ணை­மு­றிகள் மோசடி தொடர்­பான குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு கடும் சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும்.

இந்­நாட்டின் நிர்­வாகம் தொடர்பில் பல்­வேறு சந்­தே­கங்கள் எழுந்­துள்­ளன. இது சர்­வ­தேச முத­லீ­டு­க­ளுக்கு அச்­சு­றுத்­த­லாக அமைந்­துள்­ளது.

இந்தப் பிணை­முறி தொடர்பில் சட்­ட­ந­ட­வ­டிக்கை எடுப்­ப­தி­லி­ருந்து பிர­தமர் வில­கி­யி­ருக்க முடி­யாது. இதில் அவரும் சம்பந்தப்பட்டிருக்கிறார்.

எனவே பிரதமரும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனும் மற்றும் நிதியமைச்சரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.