தவம் முதலமைச்சருக்கு முன்னால் தெரிவித்த கீழ்த்தரமான வார்த்தைக்கு பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் !

thavamகிழக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகத்திற்குள் வௌி மாவட்டங்களில் கடமையாற்றுகின்ற ஆசிரியர்கள் வருகை தந்து முதலமைச்சருடன் இன்று (27) ஆசிரியைகள் பேசிக்கொண்டிருந்த வேளையில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவம் ஆசிரியைகளுக்கு முன்னால் கீழ் தரமான வார்த்தைகளை பேசியமையினால் ஆசிரியர்கள் அவமானப்பட்ட நிலையில் வௌியில் வந்த விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளது.

கிழக்கு மாகாண சபையின் 65 வது அமர்வு நடைபெற்றதையடுத்து முதலமைச்சரின் அலுவலகத்திற்குள் தங்களுக்கு அருகிலுள்ள கல்வி வலயங்களுக்கு நியமனங்களை வழங்குமாறு கோரிக்கை விடுத்துக்கொண்டிருக்கும் போது கதவை திறந்து முதலமைச்சர் அலுவலகத்திற்குள் நுழைந்த ஆர்.அன்வருக்கே அவர் இவ்வார்த்தையை பயன்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

thavam-jpg2_

ஆனாலும் இடமாற்றம் வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் .ஆசிரியர்கள் இருந்த நேரத்தில் கீழ்தரமான வசனங்களை பயன்படுத்தியமை தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் வாய்மூடி இருந்ததையும் அவதானிக்க முடிந்தது.

இருந்தும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவம் முதலமைச்சருக்கு முன்னால் தெரிவித்த கீர்தரமான வார்த்தைக்கு பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டுமெனவும் கலந்துiரையாடலில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.

thavam-jpg2_-jpg3_

கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் தவத்திற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கலந்துiரையாடலில் கலந்து கொண்டோர் வேண்டுகோள் விடுக்கின்றனர்.