கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ச வெற்றி பெற்றிருந்தால் தன்னையே முதலில் கொலை செய்திருப்பார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
கடந்த அரசாங்கத்தின் போது அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் என எவரும் தன்னுடன் கதைக்க அச்சம் கொண்டிருந்தனர். என்னுடைய தொலைபேசி அழைப்புகளும் ஒட்டுக் கேட்கப்பட்டன.
அனைத்து சிறுபான்மையின மக்களுக்கும் அநீதி இழைக்கப்பட்டது. பள்ளிவாசல்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், அனைத்து தமிழ் மக்களையும் மஹிந்த ராஜபக்ச புலிகளாகவே பார்த்தார். ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் முதலில் தன்னையே கொலை செய்திருப்பார்.
மஹிந்த ராஜபக்சவுக்கு மக்கள் பலம் ஒரு போதும் இல்லை. பொலிஸ் மற்றும் படையினரை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த பலம். அத்துடன், மோசடியாக சம்பாதித்த பண பலம் என்பனவே இருந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.