கர்ப்பபை புற்று நோயை குணப்படுத்தும் திறன் வெங்காயத்திற்கு உண்டு என்பதை நிபுணர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர்!

red onion and rosemary leavesவெங்காயம் பல நோய்களை குணப்படுத்தும் அரும் மருந்தாக திகழ்கிறது. தற்போது கர்ப்பபை புற்று நோயை குணப்படுத்தும் தன்மை உடையது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

ஜப்பானில் உள்ள குமாமோடோ பல்கலைக் கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

அதில் வெங்காயத்தில் உள்ள ஒளியோகனின்-ஏ (ஒ.என்.ஏ.) என்ற மூலப்பொருள் கர்ப்பபை புற்று நோயை குணப்படுத்தும் தன்மை உடையது என கண்டறிந்துள்ளனர்.

எனவே கர்ப்பபை புற்று நோயை குணப்படுத்தும் திறன் வெங்காயத்திற்கு உண்டு என்பதை நிபுணர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர். மேலும் வெங்காயத்தில் உள்ள ‘ஒனியோகின்-ஏ’ (ஒ.என்.ஏ.) மூலப் பொருளை இந்த வகை புற்றுநோய் மாத்திரைகளில் சேர்க்க முடிவு செய்துள்ளனர்.