நாங்கள் இரகசிய சதித்திட்டங்களை தீட்ட மாட்டோம், வெளியில் இருந்தே விளையாட்டு ஆடுவோம் : மஹிந்த

மைத்திரியும் ரணிலும் இணைந்து நாட்டை துண்டுகளாக உடைக்க முயற்சித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதியான நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Mahinda_Fotor

இரத்தினபுரியில் இன்று நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அமைச்சர்களை புலனாய்வுப் பிரிவினர் பின் தொடர்கின்றனர். தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன. 

எமது வீடுகளுக்கு எதிரிலும் பொலிஸ் பிரிவை போட்டு, அங்கு வந்து செல்பவர்களின் பட்டியலை தயாரிக்கின்றனர்.

நாற்காலி ஒன்றை கொண்டு வந்து அதில் வைத்து எழுதிக் கொள்ளுமாறு நான் கூறினேன்.

நாங்கள் இரகசிய சதித்திட்டங்களை தீட்ட மாட்டோம். வெளியில் இருந்தே விளையாட்டு ஆடுவோம்.

ஜனநாயகத்தை மதித்து வெளியில் இருந்து கொண்டே தாக்குவோம். இந்த சான்றுதலை எம்மால் தர முடியும். இரவில் அப்பம் சாப்பிட்டு விட்டு அவற்றை செய்ய மாட்டோம்.

படையினர் காப்பாற்றிய நாட்டை பிரித்து அழிக்க விடாமல பாதுகாக்க வேண்டும். பண்டாரநாயக்க ஆரம்பித்த கட்சியை யானையின் பின்னால் தொங்க விட்டுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்த கூட்டத்தை பார்த்தால், பவித்ராவை ஏன் விலகினோம் என்று கவலைப்படுவார். உங்களுக்கு தேவையானதை வழங்க நான் தயார்.

நாடாளுமன்றத்தில் தலைகளை மாற்றுவது மிகப் பெரிய காரியமல்ல. நீண்டகாலம் செல்வதற்கு முன் அது நடக்கும்.