ஹக்கீடமிருந்து கிழக்கை மீட்க மக்கள் மயிலை வீட்டுக்கு வீடு வளர்க்கின்றனர்

rauff hakeem with rishad

இன்று முஸ்லிம் சமுகத்தின் மத்தியில் பேசப்படும் விடயம் தான் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமை பற்றிய விடயம் ,

அதாவது முஸ்லிம் சமுதாயம் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற அஸ்ரப்பின் சிந்தனையுடன் எழுச்சி பெற்ற முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அஸ்ரப் அவர்களின் மறைவுக்கு பின் மக்களை சிரித்து மயக்கும் மந்திரவாதியை தலைவராக எமது சமுதாயம் எற்றுக் கொண்ட பின் முஸ்லிம் சமுதாயம் தலைகுனிந்து வாழ வேண்டிய சூழ்நிலையை மந்திரவாதி ஹக்கீம் ஏற்படுத்தி விட்டார் அதனால் இந்த மந்திரவாதியை அரசியலிருந்து துரத்த வேண்டும் என்று கிழக்கு மக்கள் சந்திக்கு சந்தி பேசிக் கொள்கின்றனர் அது விரைவில் நடக்கும் அல்லாஹ் உதவி செய்வான் 

தேர்தல் காலங்களில் பணப்பையும் பொய் மூட்டையுடனும்  அம்பாறைக்கு வந்து தனது கூலிப்படைகளின் உதவியுடன் மேடைக்கு மேடைக்கு மேடை ஜோக் பேசி பொய் கூறி மக்களை ஏமாற்றிய காலம் ஓடி விட்டது ஹக்கீம் கிழக்கின் எதிரி அதிலும் அம்பாறைக்கு சாபக்கேடு என்று மக்கள் அடையாளம் கண்டு விட்டனர் 

ஹக்கீமின் கூட்டத்தை கொத்தி விரட்ட கிழக்கு மக்கள் மயிலை கொண்டு வந்து வீட்டுக்கு வீடு வளர்க்கின்றனர் இன்று மயிலின் தலைவர் மலர்ந்த முகத்தோடு கிழக்கு மக்களை ஹக்கீடமிருந்து மீட்க போராடுகிறார் அதற்கு மக்களின் ஆதரவும் 80% இருக்கிறது 

றிசாத் பொய் சொல்லும் தலைவன் அல்ல இறையச்சம் கொண்ட சத்திய தலைவன் என்பதை மக்கள் ஏற்றுக் கொண்டு ஹக்கீம் என்னும் மந்திரவாதியை மக்கள் விரட்ட உள்ளனர் இதற்கு தடையாக இருக்கும் மந்திரவாதியின் சீசியன்கள் மறைந்து ஓடும் நிலை வரும் 

மேடையில் நான் கிழக்கின் சொந்தாக்காரன் என்று கூறும் ஹக்கீம் கிழக்கு மக்களுக்கு ஏன் பொய் சொல்வது கிழக்கு அரசியல்வாதியை கட்சியை விட்டு ஏன் விரட்டுவது என்று புரியவில்லை ஆனால் ஹசன் அலிக்கு எல்லாம் புரியம் விரைவில் மக்களுக்கு புரிய வைப்பார் கட்சியை வளர்த்த ஒரு மூத்த போராளி ஹசன் அலிக்கு நயவஞ்சகத்தால் அடித்த ஆப்பு என்பது ஹக்கீம் வானத்தை பார்த்து துப்பியது போன்ற அசிங்கமான செயல் அதன் பிரதிபலிப்பை மக்கள் விரட்டும் போது விரைவில்  புரிந்து கொள்வார்  

கிழக்கில் ஹக்கீம் எதிர்வரும் தேர்தலில் ஹசன் அலியை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று காட்டட்டும் ஹசன் அலிக்கு இருக்கும் ஆதரவு ஹக்கீமுக்கு கிழக்கில் இல்லை  தைரியம் இருந்தால் தனது தலைமையை நிறுபித்து காட்டட்டும்  அது நடக்காது காலம் கடந்த வேஷங்கள் இனி அம்பாறையில் சரிவராது அல்லது தேசிய தலைவர் என்றால் மக்களின் சத்திய தேசிய தலைவரை எதிர்த்து வண்னி அல்லது கண்டியில் வெற்றி பெற்று காட்டட்டும் அமைச்சர் றிசாத் எங்கு போட்டியிட்டாலும் வெற்றி உறுதி அதுபோல் ஹக்கீம் தோல்வி அடைவதும் உறுதி கடந்த தேர்தலில் கண்டியில் ஹக்கீமின் தோல்வியை தடுக்கவே ரனில் அசாத் சாலியை போட்டியிடாமல் தடுத்தார் அப்படி தடுக்கா விட்டால் ஹக்கீம் தற்போது பழைய குருடி கதவை திறடி என்று நீதிமன்றம்களில் ஏறி இறங்குவார் ஏதோ ரனில் ஹக்கீமின் கரத்தையை உருட்டி விளையாடுகிறார் அதனால் காலம் ஓடுகிறது 

நரி வேஷம் போட்டு கறுத்த கோட்டோடு வந்த ஹக்கீமை அஸ்ரப் கட்சியில்  சேர்த்தது தான் குற்றம் அதை அவர் மண்னறையில் நினைத்து வேதனை அடைவார் என நினைக்கிறேன் அவர் நிம்மதியாக தூங்க இன்று மக்கள் விரும்பும் தேசிய தலைவர் றிஷாட் நடவடிக்கை எடுக்கிறார் கிழக்கை அபிவிருத்தி செய்து ஹக்கீடமிருந்து மக்களை மீட்க வேண்டும் என்பதே மக்கள் காங்கிரஸின் நோக்கம் அதற்கு மக்கள் ஆதரவும் இருக்கிறது 

அஸ்ரப்பின் கட்சியையும் அவரின் சமுதாயத்தையும் ஏமாற்றி சொகுசா வாழும் ஹக்கீம் அஸ்ரப்பின் கொள்கையை மறந்தாலும் சத்திய தேசிய தலைவர் றிசாத் மறக்காமல் கிழக்கு வடக்கு மற்றும் நாட்டு மக்களுக்கு சேவை செய்து வருவதை பொறுத்து கொள்ள முடியாத ஹக்கீம் காங்கிரஸ் கூட்டம் அமைச்சர் றிசாத் என்றால் பயப்பிடுகின்றனர் அவர் மக்களுக்கு செய்யும் சேவைகளை தடுக்கின்றனர் இது ஹக்கீம் காங்கிரஸின் வங்குரோத்து அரசியல் என்பது மக்களுக்கு தெரியும் எல்லாம் ரனில் இருக்கும் வரை தான் நடக்கும் இவைகளை மக்கள்  மனதில் வைத்துக் கொண்டு எதிர்வரும் தேர்தலில் ஹக்கீமை அரசியலிருந்து விரட்ட மக்கள் மிகவும் ஆர்வத்துடன் உள்ளனர் மக்கள் மட்டுமல்ல மந்திரவாதியோடு இருக்கும் பதவி பணப் பிசாசுகளும் சேர்ந்து விரட்டும் நிலையும் வரலாம் அல்லாஹ் உதவி செய்யட்டும் 

ஜெமீல் அகமட்