பௌத்த சாசனத்திற்கு எதிராக அரசாங்கம் எதனையும் செய்யாது எனவும் பௌத்த சாசனம் தொடர்பிலான தீர்மானங்களை எடுக்கும் போது பௌத்த பிக்குகளின் கருத்துக்களை அறியாது தீர்மானம் எடுக்கப்படாது எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மாநாயக்க தேரர்களின் ஆசீர்வாதத்துடனேயே தீர்மானங்கள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ள அவர் நவீன இலத்திரனியல் கருவிகள் தொடர்பாடல் சாதனங்களினால் நாட்டின் விழுமியப் பண்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சில ஊடகங்கள் பிழையான தகவல்களை பிரச்சாரம் செய்து வருவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.