பங்களாதேசில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்துக்கோயில் கண்டுபிடிப்பு !

c04d20bd-6a16-4068-ab80-3e2ee8e67934_S_secvpfபங்களாதேஷில் தினஜ்பூரில் போச்சகஞ்ச் பகுதியில், 1000 ஆண்டுகள் பழமையான ஒரு இந்துக்கோவிலை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள பேராசிரியர் சுவாதின் சென் இதுபற்றி கூறுகையில், “நாங்கள் பழமையான இந்துக்கோவிலை போச்சகஞ்ச் பகுதியில் கண்டுபிடித்துள்ளோம். இந்தக் கோவில் 8 ஆம் நூற்றாண்டுக்கும், 9 ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று நம்புகிறோம் என்றார்.

குழுவில் இடம்பெற்றுள்ள மற்றொரு உறுப்பினரான சொஹாக் அலி, கோவில் சிலைகளையும், படிக்கட்டுகளையும் கண்டு பிடித்துள்ளோம் என்றார்.

விவசாயிகள் பயிர் சாகுபடிக்காக நிலத்தை பண்படுத்தியபோது, பழங்கால செங்கல்களை கண்டுபிடித்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் அங்கு முகாமிட்டு ஆராய தொடங்கினர் என தகவல்கள் கூறுகின்றன.

இந்துக்கோவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலம், அரசாங்கத்துக்கு சொந்தமானது. விவசாயிகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது