அஷ்ரப் ஏ சமத்
பத்தரமுல்லையில் உள்ள ” சவ்சுருபாய“ எனும் 20 மாடிகளைக் கொண்ட குடிவரவு குடியகழ்வு திணைக்களம் மற்றும் ஆட்பதிவுத்திணைக்களத்ங்களுக்கா ன நிறுவாக கட்டிடம் இன்று (29) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவா்களினால் திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வு உள்நாட்டு அலுவல்கள் மற்றும் சமுகசேவைகள் வயம்ப மாகாண அபிவிருத்தி அமைச்சா் எஸ்.பி நாவின்ன தலைமையில் நடைபெற்றது. மற்றும் அமைச்சா்கள் பாட்டலி சம்பிக்க ரணவக்க, தயாகமகே, நிமல்சிறிபால டி சில்வா, பிரதியமைச்சா்கள் பாலித்த தேவப்பெரும ,லசந்த அழகியவண்ணவும் கலந்து சிறப்பித்தாா்கள்.
இங்கு உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா –
இந்த நாட்டில் மிகவும் முக்கியமானதொரு அமைச்சுகள் தான் உள்நாட்டு அலுவல்கள், சமுசேவைகள் அமைச்சு இந்த அமைச்சின் கீழ் வருகின்ற ஆட்பதிவுத் திணைக்களம், குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம் அதேபோன்று இந்தக் கட்டித்தில் அமைச்சா் பாட்டிலி சம்பிக்க ரணவக்கவின் அமைச்சும் உள்ளது.
இந்தத் திணைக்களங்கள் கடந்த காலத்தில் பல்வேறு நிர்வாக சிக்கல்களை எதிா்கொண்டது. கடந்த மாதம் எனது தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சுக் கூட்டத்தில் இந்த அமைச்சிக் கீழ் வருகின்ற இவ்விரு திணைக்களங்கள் சில திருத்தங்கள் கொண்டுவருவதற்கு கலந்துரையாடப்பட்டது. அடுத்த பாதுகாப்பு கூட்டத்தில் அமைச்சா் நாவின்ன உட்பட அவரின் அமைச்சின் கிழ் வருகின்ற சகல உயா் அதிகாரிகளும் கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுக்கின்றேன். கடந்த கால யுத்தத்தின் போது இடம்பெயா்ந்த மக்கள் மற்றும் அகதிகளாக வாழும் மக்கள் தற்பொழுது தமது குடிவரவு மற்றும் குடியகழ்வு மற்றும் அடையாள அட்டைகளைப் பெறுவதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனா். . இதனை நிவா்த்தி செய்வதற்கும் நாம் இந்தத் திணைக்களங்களில் உரிய திருத்தங்கள் கொண்டுவருதல் வேண்டுமா என்பது பற்றியும் கலந்துரையாடல் வேண்டும்.
இந்த நிருவாக கட்டிடத்தில் பல்வேறு வசதிகள் வாய்ப்புக்கள் செய்யபட்டாலும் இங்கு இருந்து செயல்படுகின்ற அதிகாரிகள் ஊழியா்கள் தத்தமது சேவையினை திறம்பட மக்களுக்கு செயல்படுத்த வேண்டும். இவ்வாறு வசதியான கட்டிடங்கள், கனணிமயப்படுத்தல் போன்ற சேவைகளை நாம் பெற்றுக் கொள்வது போன்று உங்களது சேவைகளை பொதுமக்களுக்கு செய்யாது போனால் அழகான கட்டிடங்கள் அமைப்பதில் பயண் இல்லை.. இந்த நாட்டில் வாழும் 2 கோடி மக்களுக்கும் அந்த சேவைகைள் சென்றடைதல் வேண்டும். என ஜனாதிபதி கூறினாா்.
இங்கு உரையாற்றிய அமைச்சா் நாவின்ன
இக்கட்டிடத்தில் நவீன உலகில் உள்ள சேவைகள் போன்று குடிவரவு குடியகழ்வு, மற்றும் அடையாள அட்டை திணைங்களங்கள் கனனிமயப்படத்தப்பட்டு எந்தவொரு இயற்கை அனா்த்தங்களுக்கும் தாக்குப் பிடிக்கவாறு கனனிமயப்படுத்தப்பட்டுள்ளது. ஒரே நாளியல் 5000 பேருக்கு கடவுச் சீட்டோ, அடையாள அட்டைகள் வழங்குவதற்கு முடியும். இந்த கட்டிடத்தில் 11 மாடிகளை இந்த அமைச்சின் கீழ் தரப்பட்டுள்ளது. அடையாள அட்டைத் திணைக்களம் ஒரு வருடத்திற்கு 500 மில்லியன் உழைக்கின்றது. அதே போன்று குடிவரவு குடியகழ்வு திணைக்களம் 11 பில்லியனை வருமானமாகப் பெற்றுள்ளது. எனத் தெரிவித்தாா்.