கடந்த கால அரசியல் வரலாற்றில் அரசியல் செய்தவர்கள் ஆட்சியாளரின் கரத்தை பலப்படுத்திக் கொண்டு அரசியல் செய்தார்கள் இதனால் மக்களின் பிரச்சினை தீர வில்லை இதை எடுத்து கூற யாரும் இல்லை என்ற நிலையில் முஸ்லிம் சமுதாயம் வாழ்ந்த போது முஸ்லிம்களின் உரிமை குரலாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உருவானது அதன் தலைவராக மறைந்த தலைவர் அஸ்ரப் இருந்தார்
அஸ்ரப் அரசியல் செய்த சொற்ப காலத்தில் முஸ்லிம் சமுதாயத்தின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு மக்கள் தலைநிமிர்ந்து வாழ்ந்தனர் மக்கள் அஸ்ரப் அவர்களுக்கு மரியைதை செலுத்த கட்சியை வளர்ச்சி அடைய செய்தனர்
ஆனால் அஸ்ரப் அவர்களின் மறைவுக்கு பின் நப்சியின் ஆசைக்காக தலைமை பதவியை பெற்ற சிங்கள பிரதேசத்தில் வசிக்கும் றவூப் ஹக்கீமால் அஸ்ரப்பின் அரசியலை செய்ய முடியவில்லை காரணம் அவர் வீர பேச்சு உள்ள கோழை அத்துடன் முஸ்லிம்கள் பற்றி பேசும் போது தனது ஊரில் தனக்கு ஏதாவது ஆபத்து வருமோ என்ற அச்சம் இது சிங்கள பிரதேசங்களில் வாழும் ஒவ்வொரு முஸ்லிம் மகனுக்கும் உருவாகுவது வழக்கம் தான் அதனால் ஹக்கீம் மீது குற்றம் சொல்ல முடியாது ஆனால் ஹக்கீமின் குனநாலங்களை அறிந்து அவருக்கு தலைமை பதவியை வழங்கியவர்கள் மீது தான் குற்றம் கூற வேண்டும் இலங்கை முஸ்லிம்களின் முதுகெழும்பாக உள்ள கிழக்கு மகானத்தை சேர்ந்த ஒரு தலைமையால் மட்டுமே முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்க முடியும் இதை இன்று மக்கள் உணந்து ஹக்கீமை தலைமை பதவியிலிருந்து விரட்ட முடிவு செய்து கிழக்கின் எழுச்சி மூலம் சகல ஏற்பாடுகளும் நடக்கின்றன விரைவில் ஹக்கீம் வெளியேறுவார்
ஆனால் ஹக்கீம் 16 வருடமாக முஸ்லிம் சமுதாயத்துக்கு ஏதுவும் செய்யா விட்டாலும் ஹசன் அலி செய்துள்ளார் மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்களுக்கு ஆலோசனை வழங்கி கட்சியை வளர்க்க தனது சொத்துகளை தியாகம் செய்த கட்சியின் செயலாளர் ஹசன் அலி அவர்கள் இன்றும் கூட மறைந்த தலைவரின் சிந்தனையில் அரசியல் செய்கிறார் அவர் மக்களின் பிரச்சினைகள் பற்றி பாராளுமன்றம் பொது இடங்களில் பேசியுள்ளார் முன்னால் மனித உரிமை ஆனையாளர் நவநீதம் பிள்ளை இலங்கை வந்த போது முஸ்லிம்கள் எதிர் நோக்கும் பிரச்சினை பற்றி மிகவும் துனிச்சலோடு அறிக்கை ஒன்றை கொடுத்தார் அது மஹிந்த ராஜபக்சவுக்கு பெரும் தலையீடியாக இருந்தது அந்த நேரம் நானில்லை ஹசன் அலி தான் கொடுத்தார் என்று கூறி ஹசன் அலியை காட்டி கொடுதீதவர் தான் இந்த ஹக்கிம் யாருக்கும் பயப்பிடாமல் சமுதாயத்துக்காக பேசுபவர் தான் ஹசன் அலி இப்படி இது வரை ஹக்கீம் காங்கிரஸின் உறுப்பினர்கள் எவரும் வாய் திறந்து பேச வில்லை பேசவும் தெரியாது
இன்று பாராளுமன்றத்தில் இருப்பவர்கள் யார் என்று பார்த்தால் வினோத உடைக்கு வந்தவர்கள் போல் காட்சி அளிக்கின்றனர் பைசால் காசிம் மன்சூர் ஹரீஸ் அலி சாகீர் ஹக்கீம் தௌபீக் மக்களுக்கு சம்மந்தம் இல்லா சல்மான் இந்த கூட்டம் பாராளுமன்றம் சென்று ஒரு வருடம் பூர்த்தியாகி விட்டது ஏதாவது சமுதாயத்துக்காக பேசி இருக்கிறார்களா? அல்லது செய்து இருக்கிறார்களா ? ஏதுவுமே இல்லை ஆனால் கொமிசன் வருமானத்துக்காக மக்களுக்கு பிரயோசனம் இல்லா கட்டிடம் தரமற்ற பாதைகள் நிரந்தரமற்ற சிற்றுளியர் வேலை வாய்ப்பு என்பன செய்து இருக்கின்றனர் ஆனால் மக்களின் நீண்ட கால பிரச்சினைகள் இருக்கிறது அவைகள் இவர்களுக்கு தெரியாது கேட்டால் தடுமாற்றம் இவர்கள் இன்று பதவி பணத்துக்கு சோரம் போய் விட்டனர்
ஹசன் அலி பாராளுமன்றம் சென்றிருந்தால் கரையோர மாவட்டமாவது பேசி எடுத்து இருப்பார் அல்லது ஏதாவது சமுதாயத்துக்கு செய்து இருப்பார் என்று மக்கள் இன்று கூறுகின்றனர்
இன்று முஸ்லிம் காங்கிரஸில் இருப்பவர்களில் ஒரு சிலர் மட்டுமே அஸ்ரப் அவர்களின் அரசியல் செய்கின்றனர் அதில் செயலாளர் ஹசன் அலி அவர்களே முன்னிலையில் இருக்கிறார் அதனால் முஸ்லிம்கள் பற்றி பாராளுமன்றத்தில் துனிச்சலுடன் பேசக் கூடியவர் என்பதால் அவர் உயிர் உள்ள வரை சமுதாயத்தின் நலவுக்காக பாராளுமன்றம் செல்லும் தகுதியுடையவர் இப்படியானவர் பாராளுமன்றம் செல்வதை சூழ்ச்சிகரமாக ஹக்கீம் தடுத்தது என்பது முஸ்லிம் சமுதாயத்துக்கு செய்த மாபெரும் துரோகம் என்று தான் கூற வேண்டும்
இன்று நாட்டில் உருவாகியுள்ள நல்லாச்சியில் புதிய அரசியல் யாப்பு உருவாக்கிறது அதில் சகல மக்களுக்கும் சம உரிமை வழங்க வேண்டும் என்று மக்கள் கருத்து கூறுகின்றனர் ஆனால் முஸ்லிம்கள் பற்றி அறிக்கை சமர்ப்பிக்க எவரும் இல்லை ஆனால் வட கிழக்கை இனைத்து தமிழ் முஸ்லிம் மக்களை ஓன்றினைத்து பிரச்சினையை உருவாக்க ஹக்கீம் மறைமுகமாக செயல்படுகிறார் என அறிய முடிகிறது
எனவே இன்று முஸ்லிம்களின் தலைவர் என்று கூறிக் கொண்டு ஹக்கீம் போலி வேஷம் போட்டு முஸ்லிம் சமுதாயத்தை ஏமாற்றி அரசியல் செய்யும் போது சமுதாயத்துக்காக துனிந்து குரல் கொடுக்கும் செயலாளர் ஹசன் அலி போன்றோரை பாராளுமன்றம் அனுப்ப முஸ்லிம் சமுதாயம் முன் வர வேண்டும்
ஜெமீல் அகமட்