ஆஸ்துமாவை குணமாக்கும் நெல்லிக்காய் ஜூஸ்!

201607281126477981_amla-juice-gives-immunity_secvpf
உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் உணவு பொருட்களும், பழக்க வழக்கங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக உணவு பொருட்களில் காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்றவை பெரிதும் உதவியாக உள்ளன. அவற்றில் ஒன்று தான் நெல்லிக்காய். பொதுவாக நெல்லிக்காயில் வைட்டமின் சி அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது. நெல்லிக்காயில் மலை நெல்லிக்காய் என்ற ஒன்றும் உள்ளது. இது தான் உடலுக்கு மிகவும் சிறந்தது.
அதனால் தான் ஆயுர்வேதத்தில் நெல்லிக்காயை அதிகம் பயன்படுத்துகின்றனர். மேலும் நெல்லிக்காயால் செய்யப்படும் ஜூஸ் சற்று துவர்ப்பாக இருக்கும். துவர்ப்பு உள்ளது என்பதற்காக அதனை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டாம். ஏனெனில் அதனை தினமும் உடலில் சேர்த்து வந்தால், அந்த நெல்லிக்காயின் உண்மையான பலனை நிச்சயம் உணரமுடியும். நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகளை கீழே பார்க்கலாம்.
* நீரழிவு நோயாளிகள், நெல்லிக்காய் சாற்றில் சிறிது மஞ்சள் தூள் மற்று தேன் சேர்த்து கலந்து குடித்தால் நல்லது. நீரழிவு நோயை கட்டுப் படுத்தும்.
* நெல்லிக்காய் சாற்றினை தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் குடித்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உடல் எடையானது குறையும்.
* நெல்லிக்காய் சாற்றில் சிறிது தேன் கலந்து, தினமும் இரண்டு முறை குடித்து வந்தால் ஆஸ்துமா குணமாகிவிடும்.
* நெல்லிக்காய் குடலியக்கத்தை சீராக வைக்கும். எனவே இதனை தினமும் குடித்து வந்தால், மலச்சிக்கல் பிரச்சினையை சரி செய்துவிடலாம்.
* நெல்லிக்காய் சாற்றில் தேன் கலந்து குடிக்கும் போது, ரத்தமானது சுத்தமாகும். இதனால் நன்கு சுறுசுறுப்போடு உடல் ஆரோக்கியமாக இருக்கலாம்.
* கோடைக்காலத்தில் உடலானது அதிக வெப்பமாக இருக்கும். எனவே அத்தகைய உடல் வெப்பத்தை தணிப்பதற்கு நெல்லிக்காய் சாற்றை குடித்தால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.
இதுதவிர ரத்த சோகை, இதய நோய், சரும பிரச்சினை, கண்பார்வை அதிகரித்தல் உள்பட பல்வேறு நன்மைகள் உள்ளது.