பாரத லக்ஷ்மன் கொலை வழக்கு- துமிந்த சில்வா உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு !

duminda-bharatha-lakshmanபாரத லக்ஷ்மன் பிரேமசந்திர கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளார். 

துமின்த சில்வாவின் சட்டத்தரணி ஊடாக மேன்முறையீட்டு மனு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது. 

மூவரடங்கிய நீதிபதிகள் குழுவின் பெரிம்பான்மை தீர்மானத்திற்கு அமைவாக தனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்மை சட்டத்திற்கு மாறானது என்று மேன் முறையீட்டில் கூறப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக அந்த தண்டனையை செல்லுபடியற்றதாக்கி அனைத்து குற்றங்களில் இருந்தும் தன்னை நிபந்தனையற்ற விடுதலை செய்யுமாறு உச்ச நீதிமன்றை அவர் கோரியுள்ளார். 

பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்படிருந்த 13 பேரில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட 05 பேருக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டு அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 

இவர்களில் மூவர் ஏற்கனவே அந்த தீர்ப்புக்கு எதிராக மேன் முறையீடு செய்துள்ளனர்.