மாகாணத்துக்குரிய அதிகாரங்கள் சரிவர வழங்கப்படவேண்டும்-முதலமைச்சர்!

DSC_1190_Fotor

முதலமைச்சர் ஊடகப்பிரிவு

கிழக்கு மாகாணத்துக்கான அனைத்து அதிகாரங்களையும் அரசு வழங்கவேண்டும் அதனை வழங்குகின்ற போதுதான் கிழக்கு மாகாணத்தில் வாழும் மக்களின் அபிலாசைகளை சரிவர செய்து கொடுக்கலாம்.  என்று நிந்தவூர் பிரதேச சபை திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போது  கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் உரை நிகழ்த்தினார்.

DSC_1321_Fotor
அங்கு அவர் தொடர்ந்தும் உரை நிகழ்த்துகையில்:
இன்று மக்கள் கேட்பவை/ நினைப்பவை நடக்க வில்லை என்ற குறை வந்து கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் அதிகாரங்கள் குறைவாக வழங்கப்பட்டிருப்பதே, அதிகாரங்கள் சரிவர வழங்கப்பட வேண்டும் அதற்காக மத்திய அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கிழக்கு மாகாணத்துக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படும் பட்சத்தில் மக்கள் பணிகள் இன்னும் சிறப்படையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இருக்க முடியாது.
கிழக்கு மாகாணத்தில் பெறப்படும் வரிப்பணம் கிழக்கு மக்களின் தேவைக்குப்பயன் படுத்தப்பட வேண்டும். இன்று கிழக்கு மாகாணத்தில் இருக்கும் தேவைகளை செய்து முடிக்க தேவையான நிதி இல்லாமல் இருக்கிறது. எனவே கிழக்கில் இருந்து வரிகள் மூலம் பெறப்படும்  நிதிகள் கிழக்குக்கே கிடைக்குமென்றால் அதன்மூலம் பாரிய வேலைப்பாடுகளை செய்து கிழக்கை அபிவிருத்தி செய்ய ஓரளவேனும் முடியும்.
கிழக்கு மாகாணம் கடந்த 30 வருடத்துக்கு மேற்பட்ட யுத்த அளிவுகளில் பெரிதும் பாதிக்கப்பட்டு பல பல இன்னல்களைச் சந்தித்துள்ளது. எனவே உடனடியாக கிழக்கை கட்டியெழுப்புவது என்பது பாரிய கஷ்டமான விடையம். எனவே எப்படியாகினும் கிழக்கு மக்களின் அபிலாசைகளை சரிவர நிறைவேற்றிக்கொடுக்க பெரும் முயற்சி எடுத்து வருகிறேன் பல வளிகளும் அனைவரும் ஒத்தாசை வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.
நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளார் எம்.ஏ.தாஹீர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நகர அபிவிருத்தி நீர்வழங்கள் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம் , கெளரவ அதிதியாக கிழக்கு மாகாண முதல்மைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், மற்றும் விஷேட அதிதிகளாக திகாமடுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பைஷல் காசிம், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்,ஐ.மன்சூர் மாகாண சபை உறுபினர்களான: ஆரிப் சம்சுதீன் ஏ.எல்.எம்.நஸீர், ஏ.எல்.தவம்.ஷிப்லி பாறூக், ஆகியோருடன் பிரதேச சபை தவிசாளார்கள், உறுப்பினர்கள், நிருவாகத்தினர் கட்சியின் முக்கிய உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
DSC_1204_Fotor  DSC_1207_Fotor