ஐரோப்பிய ஒன்றியத்தில் அதிகரிக்கும் குடியேறிகளின் நெருக்கடியை கட்டுப்படுத்துவதற்கு அடைக்கலக் கோரிக்கை தொடர்பான சட்ட விதிகளில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு பிரதான தெற்கு ஐரோப்பிய நாடுகள் இணக்கம் தெரிவித்துள்ளன.
ஐரோப்பிய நாடுகளுக்கடையேயான அடைக்கலம் கோருவது தொடர்பான சட்ட விதிகளை மாற்றியமைப்பது ஒன்றியத்தின் முன்னரங்க நாடுகள் குடியேற்றங்களை தடுத்து நிறுத்துவதற்கு அவசியமான நிபுணத்துவ ஆலோசனையை பெறுதல் தந்திரோபாய நடவடிக்கைகளுக்கான முதலீட்டை இரட்டிப்பாக்குதல் ஆகிய அம்சங்களில் இணங்குவதாக பிரான்ஸ் இத்தாலி ஸ்பெயின் கிறீஸ் போத்துக்கல் மோல்ற்றா மற்றும் சைப்பிரஸ் ஆகிய நாடுகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளன.
ஐரோப்பாவுக்குள் குடியேறும் நோக்கத்துடன் கடற்பயணம் மேற்கொண்டு ஆபத்தில் சிக்கியிருந்த 6 500 குடியேறிகளை ஒரே நாளில் மீட்டதை தொடர்ந்து ஏற்பட்டிருக்கும் நெருக்கடியான நிலை குறித்தும் மேற்படி நாடுகளினட தலைவர்கள் விவாதித்துள்ளார்கள்.
அடுத்த வாரம் நடைபெற இருக்கும் ஒன்றியத்தின் 27 நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டிலும் குடியேற்றம் தொடர்பான விடயத்தில் மேலதிக முடிவுகள் எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.