கோத்தபாய ராஜபக்சவுக்கும் துமிந்த சில்வாவுக்குமிடையிலான இணைப்பு

gota_duminda3

 

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மிகவும் மன ரீதியான குழப்பத்திலும் அமைதியற்ற நிலைமையிலும் காணப்படுவதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

கோத்தபாயவின் அப்போதைய அமைச்சின் கண்கானிப்பு உறுப்பினராகவும், போதைப்பொருள் வலையமைப்பின் பிரதானியான ஆர்.துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டமை தொடர்பில் அதிர்ச்சியடைந்த கோத்தபாய, மிகவும் வருத்தத்துடன் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சில காலங்களாக சுவாச நோயினால் பாதிக்கப்பட்டுள்ள கோத்தபாய, இந்த சம்பவத்தினால் நேற்று முன்தினம் மாலை வேளையில் மிகவும் தீவிர நிலையடைந்ததாக தெரியவந்துள்ளது.

கோத்தபாய, துமிந்த சில்வாவை “சுது புத்தா” என்றே அழைப்பார். அந்தளவிற்கு இருவருக்கும் இடையில் இணைப்பு ஒன்று காணப்பட்டுள்ளன.

துமிந்தவுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதனை தொடர்ந்து துமிந்தவின் தந்தைக்கு கோத்தபாய அழைப்பை ஏற்படுத்தியுள்ளார்.

மரண தண்டனை குறித்து கேள்விப்பட்டதும் மிகவும் அதிர்ச்சி மற்றும் வேதனை அடைந்தேன். பிரேமசந்திர கொலை சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் இருந்து துமிந்தவை காப்பாற்ற தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ததாக கோத்தபாய குறிப்பிட்டுள்ளார். 

இலங்கையில் இருந்து துமிந்தவை அனுப்பி வைக்கும் போது விமான நிலையம் வரையில் அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கியதனை குறித்த சந்தர்ப்பத்தில் கோத்தபாய நினைவுபடுத்தியுள்ளார்.

எப்படியிருப்பினும் கோத்தபாய தனது மகனை இழப்பதனை விடவும், “சுது புத்தா” தூக்கு மேடைக்கு செல்வதனை குறித்து மிகவும் வேதனையுடன் இருப்பதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.