ஒபாமாவை விட, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஒரு சிறந்த தலைவர்: டிரம்ப்

அமெரிக்காவில் விரைவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்டு டிரம்ப் தனது பிரசாரத்தின்போது பலமுறை சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதிபர் ஒபாமாவையும் விமர்சித்து வருகிறார். 

160422_POL_Donald-Trump-Act.jpg.CROP.promo-xlarge2

இந்நிலையில், மூத்த ராணுவ பிரிவினருடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய டிரம்ப், தற்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமாவை விட, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஒரு சிறந்த தலைவர் என்று கருத்து தெரிவித்தார்.

மேலும், நவம்பர் மாதத்தில் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில், தான் தேர்ந்தெடுக்கப்பட்டால், தனக்கும் ரஷ்ய அதிபர் புதினுக்கும் இடையேயான உறவில் பிரச்சனைகள் இருக்காது என்றும், ரஷ்யாவுடன் மிகமிக நல்லுறவை வைத்துக்கொள்ள விரும்புவதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.

முன்னதாக இதே நிகழ்ச்சியில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டன் பேசினார்.