அனுமதிப் பத்திரம் இன்றி யானைக் குட்டி ஒன்றை வைத்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள, உடுவே தம்மாலோக தேரர் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் தேரர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த போதும் அவர் வௌிநாடு செல்ல நீதிமன்றம் தடை விதித்திருந்தது.
இந்தநிலையில் லண்டனில் அடுத்த மாதம் 3ஆம் திகதியிலிருந்து 7ஆம் திகதி வரை நடைபெறவுள்ள பௌத்த நிகழ்வில் கலந்துக்கொள்ள அனுமதிக்குமாறு தேரரின் சார்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனை ஏற்றுக் கொண்ட நீதவான் நிசங்க பந்துல கருணாரத்ன தம்மாலோக தேரர் வௌிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ள ஒரு வாரத்திற்கு அனுமதித்துள்ளார்.