தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழுவிற்கு தலைமை தாங்கியிருந்தார்.
இந்தச் சந்திப்பின் போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் பிரதமருடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
சட்டவிரோதமான முறையில் வடக்கில் மக்கள் குடியேற்றப்படுதல் மற்றும் பௌத்த சிலைகள் அமைத்தல் போன்றன தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்படும் என பிரதமர் உறுதி வழங்கியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.