அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி மதுரை ஐகோர்ட்டில் விஜயகாந்த் தொடர்ந்த வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!

201608261532424019_Vijayakanth-Madurai-High-Court-to-overturn-the-defamation_SECVPFதஞ்சாவூரில் கடந்த 2012-ம் ஆண்டு நடந்த தே.மு.தி.க. கூட்டத்தில் விஜயகாந்த் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக அரசு வக்கீல் தஞ்சை மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கையும், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 4 அவதூறு வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் விஜயகாந்த் மனு செய்தார்.

இந்த வழக்கு கடந்த 23-ந் தேதி நீதிபதி விமலா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு தொடர்பாக விஜயகாந்த் தரப்பு வக்கீல் அவகாசம் கேட்டார்.

இதையடுத்து வழக்கை 26-ந்தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி விமலா உத்தரவிட்டார்.

அதன்பேரில் இந்த வழக்கு மதுரை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. விஜயகாந்த் தரப்பில் ஆஜரான வக்கீல் வாதாடும்போது இந்த வழக்கில் மூத்த வக்கீல் ஆஜராக இருப்பதாக தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து நீதிபதி விமலா, வழக்கு விசாரணையை வருகிற 8-ந் தேதிக்கு மீண்டும் தள்ளிவைத்து உத்தரவிட்டார்.