உடனடியாக அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தீவிரவாத தடைச் சட்டத்தை நீக்கவும் நடவடிக்கை வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம், அதிகாரத்துக்கு வந்ததில் இருந்து துரிதமாக செயற்படவில்லை எனவும் சம்பந்தன் குற்றம் சுமத்தியுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் 11,000 கைதிகள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், இந்த அரசாங்கம் பொறுப்பேற்று 18 அல்லது அதற்கும் அதிக மாதங்கள் ஆகின்ற போதும் நாம் எதிர்பார்த்த துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் கூறியுள்ளார்.
பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தும் போதே இரா.சம்பந்தன் மேற்குறிப்பிடப்பட்ட விடயங்களை தெரிவித்துள்ளார்.