நேற்றைய மு.கா உயர் பீட கூட்டத்தை குழப்பியடித்தது முன் கூட்டியே திட்டமிட்ட செயலா? அல்லது தலைமைத்துவத்திற்கு கட்டுப்படாத செயல்பாடா?
நேற்றைய கூட்டத்தில் ஹகீம் அவர்கள் பேசியதும், கட்சி சொத்துக்கள் பற்றி சேகு தாவூத் பஷீர் அவர்கள் பேச முற்பட்டபோது, அவரைப் பேச விடாமல் தடுத்து சிலர் குழப்பம் விளைவித்தனர். ஹகீம் அவர்கள் அவரைப் பேச விடுமாறு பல முறை கோரியும் குழப்பவாதிகள் தொடர்ந்தும் ஹகீம் அவர்களின் கோரிக்கையை கணக்கிலெடுக்காது தொடர்ந்தும் அநாகரிகமாக செயல்பட்டனர்.
ஒன்றில் இது ஹகீம் அவர்களால் முன் கூட்டியே திட்டமிட்டு, கட்சியின் சொத்துக்கள் பற்றி பஷீர் அவர்கள் பேசினால் குழப்பும் படி தன் அடிவருடிகளுக்கு உத்தரவிடப்பட்டிருக்க வேண்டும். அல்லது ஹகீம் அவர்களின் தலைமைத்துவத்திற்குக் கட்டுப்படாமல் இவ்வடிவருடிகள் ஹகீமுக்குத் தமது விசுவாசத்தைக் காட்ட பொது இடம் என்பதை மறந்து தமது இயல்பை வெளிக்காட்டி அநாகரிகமாக கூச்சலிட்டிருக்க வேண்டும்.
நேற்றைய சம்பவத்தில் ஹகீம் அவர்களுக்கு சம்பந்தம் இல்லாவிட்டால், தனது உத்தரவை மீறி காட்டுத்தனமாக கூச்சலிட்டு அநாகரிகமாக நடந்து கொண்ட உறுப்பினர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பாரா? அல்லது அதை கண்டு கொள்ளாது விட்டு, தன் ஆணைப்படியே இது நடந்தது என்பதை ஏற்றுக்கொள்வாரா?
எது எப்படியாயினும், ஒரு உயர் பீட கூட்டத்தையே நடத்தவொண்ணாமல் இருக்கும் தோல்வியடைந்த தலைமைத்துவத்திற்குச் சொந்தக்காரரான ஹகீம் அவர்கள், பேராளர் மாநாட்டை நடாத்துவதென்பது அவரது “வாட்டர்லூ” ஆகும் என்று கூறப்படுகிறது.
இதை முடிந்தளவு தள்ளிப்போட முயற்சித்தாலும், என்றாவது ஒரு நாள் நடத்தித்தானே ஆகவேண்டும். இனி எதிர்வரும் தேர்தல் 2017 ஏப்ரல் அளவில் வருமானால் அதற்கு முன்னர் பேராளர் மாநாடு நடாத்தப் பட வேண்டிய கட்டாயம் ஏற்படும். அது ஹகீம் அவர்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும் மாநாடாக இருக்க வேண்டும் என்பதில் கிழக்கின் எழுச்சி மிக கவனமாக செயற்படும்.
இந்நிலமைகளில் ஹகீம் அவர்களுக்கு உள்ள சிறந்த தெரிவு யாதெனில், சாட்சிக் காரனின் காலில் விழுவதை விடவும், சண்டைக்காரனின் காலில் விழுவதாகும்.
சேகு இஸ்ஸதீன் அஸ்ஸுஹூர்
செயலாளர்
கிழக்கின் எழுச்சி