இலங்கையின் எதிர்கால பொருளாதார மேம்பாட்டுக்கு இந்தியாவின் பங்களிப்பு அத்தியாவசியமானது: ரிஷாட்

PRESS COMMUNIQUE–MINISTRY OF INDUSTRY & COMMERCE, SRI LANKA–11 AUGUST, 2016

11AUGIND_Fotor

அயல் நாடுகளான இந்தியாவும் இலங்கையும்  தற்போது வர்த்தக வரலாற்றில் முக்கியமான திருப்பு முனை விளிம்பில் இருக்கின்றனர்.; இரு நாடுகளிடையிலான  இருதரப்பு வர்த்தகம் வருடா வருடம் 6.3மூ  சதவீதமாக உயர்ந்துள்ளதுடன் அதன்  ஒட்டுமொத்த இருதரப்பு வர்த்தக தொகுதி வரலாற்று இலக்கினை நோக்கி 83 மில்லியன் அமெரிக்க டொலரினை ஈட்டியுள்ளது என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

கடந்த வாரம் கொழும்பு ரேணுகா ஹோட்டலில் இடம்பெற்ற இந்திய – இலங்கை பொருளாதார உரையாடலின் 5 வது பதிப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் ரிஷாட்  பதியுதீன் இதனை தெரிவித்தாh.;
இலங்கை வர்த்தக சம்மேளன கூட்டமைப்பும் இந்திய வர்த்தக சம்மேளன் கூட்டமைப்பும் இணைந்து   ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் இலங்கைக்கான  இந்திய துணை உயர் ஸ்தானிகர் அரிந்தம் பாச்சி , இந்திய வர்த்தக சம்மேளன கூட்டமைப்பின் தூதுக்குழுவினர் மற்றும் பிரதிநிதிகள் இலங்கை வர்த்தக சம்மேளன கூட்டமைப்பின் தலைவர் சரத் கஹபாலராராச்சி உட்பல பல வர்த்தக பிரமுகர்கள கலந்துக் கொண்டனர்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன்  இந்நிகழ்வில் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்:
இன்றைய இந்திய – இலங்கை பொருளாதார உரையாடல்  வெற்றிகரமாக அதன்  ஐந்தாவது கூட்டத்தொடருக்கு நகர்ந்துள்ளதுடன் வர்ததகத்தனுடான வர்த்தகம் (டீ2டீ) இருதரப்பு  முயற்சிகளும் முன்னகர்த்தப்பட்டுள்ளது. இவை எதிர்வரும் காலங்களில் இரு அரசாங்கங்கள் மீதான வரலாற்று இருதரப்பு ஒத்துழைப்பினை திட்டமிட்டு விஸ்தரிப்பதற்கான வழிiயாக காணப்படுகின்றது. நாங்கள் எங்கள் இருதரப்பு வர்த்தக வரலாற்றில் முக்கியமான திருப்பு முனைகளில் விளிம்பில் இருக்கும் போது இன்றைய அமர்வு  நடைபெறுகிறது.  இதில் இரு நாடுகளும் மிக உயர்ந்த நிர்வாக மட்டம் என்று கூறப்படும்  தற்போதுள்ள வர்த்தகபொறிமுறை நுட்பத்தை விஸ்தரிப்பதற்கு எதிர்பார்க்கின்றோம்.

இலங்கை வர்த்தக திணைக்களத்தின் சமீபத்திய தரவுகளின் படி, கடந்த ஆண்டு இரு நாடுகளுக்குமி டையேயான மொத்த இருதரப்பு வர்த்தக 4.91 பில்லியன் அமெரிக்க டொலரினைஎ எட்டியுள்ளது என்று காட்டுகிறது. ஐந்து பில்லியன் அமெரிக்க டொலர்க்கான வரலாற்றுமிக்க இருதரப்பு வர்த்தக மைல்கலை  தாண்டுவதற்கு 83 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பு மட்டுமே குறைவாக காணப்படுகின்றது என்பதை நீங்கள் எலலோரும் ஒத்துக்கொள்ள வேண்டும். இரு நாடுகளும்  எந்த நேரத்திலும் இருதரப்பு வர்த்தகத்தில் 5 பில்லியன் புள்ளிகளைக் கடக்க தயாராக இருக்கின்றன என்பது சுவாரஸ்யமன விடயமாகும்.

இலங்கையில் தற்போது உருவாக்கப்பட்டுள்ள நிலை இரு நாடுகளுக்குமிடையிலான பல்தரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்தும். அயல் நாடான இந்தியாவுடன் நெருங்கிய நட்புறவை பேணுவது என்பது எமது வெளிநாட்டுக் கொள்கையின் முக்கியத்துவமானதாகும். இலங்கையுடன் இணைந்து இந்தியா செயலாற்றுவதற்கான சந்தர்ப்பமாக அரசியல் மாற்றம்  இன்று காணப்படுகிறது. எமது எதிர்கால பொருளாதார மேம்பாட்டுக்கு இந்தியாவின் பங்களிப்பு அத்தியாவசியமானது. இந்தியாவும் இலங்கையும்  தற்போது வர்த்தக வரலாற்றில் முக்கியமான திருப்பு முனை விளிம்பில் இருக்கின்றனர்.; இந்தியா-இலங்கை இடையேயான  இருதரப்பு வர்த்தக வருடா வருடம் 6.3மூ  சதவீதமாக உயர்ந்துள்ளதுடன் அதன்  ஒட்டுமொத்த இருதரப்பு வர்த்தக தொகுதி வரலாற்று இலக்கினை நோக்கி 83 மில்லியன் அமெரிக்க டொலரினை ஈட்டியுள்ளது   அமைச்சர் ரிஷாட் சுட்டிக்காட்டினார்.
இலங்கைக்கான  இந்திய துணை உயர் ஸ்தானிகர் அரிந்தம் பாச்சி இ;ந்நிகழ்வில் உரையாற்றும் போது தெரிவித்தாவது:

இரு நாடுகளின் சமீபத்திய அரசியல் மாற்றங்கள் இருபுறமும் காணப்பட்ட முதலீடு மற்றும் வர்த்தகம் மீதான நம்பிக்கையினை புதுப்பிப்பித்தன. இலங்கையின் புதிய மாற்றமானது இந்திய, இலங்கை உறவுகள் மீதான வரலாற்று ரீதியான வேறுபட்ட மாற்றங்களை வலுவான நிலையில் முன்னோக்கி நகர்த்த முடியும்.    இந்தியாவினதும் இலங்கையினதும் சிறந்த எதிர்காலம் மற்றும் பாதுகாப்பு என்பன பிரிக்கப்படமுடியாதவையாகும்.

உயர் மட்ட இந்திய தூதுக்குழுவினர் அக்டோபர் மாதம் கொழும்புக்கு விஜயம் செய்யவுள்ளனர். இவர்கள் கொழும்பில் இருக்கும் காலப்பகுதியில் ‘இந்தோ – லங்;கா தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கான பேரiவை’யினை மீள்கட்டியடைப்பதற்கு  எதிர்பார்க்கின்றோம். எங்கள் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட பின்னர், இந்திய-இலங்கை இருதரப்பு உறவுகள் மற்றும் பொருளாதார உறவுகள மீதான கவனம் பெரிதும் காணப்பட்டது. இலங்கைக்கான இந்திய ஏற்றுமதி 10 மடங்கு அதிகரித்தது. அதேநேரம் இலங்கையின் ஏற்றுமதியில் மூன்றில் இரண்டு சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் பயன்களை பெற்றுள்ளது.  இந்திய-இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை 1998 ஆம் ஆண்டு  டிசம்பர்; கைச்சாத்திடப்பட்டு 2000 ஆம் ஆண்டு  அமலுக்கு வந்தது என்று அவர் சுட்டிக்காட்டினார்.