காணாமல் போனோர் அலுவலகம் குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்டமை வரவேற்கப்பட வேண்டியது என பிரித்தானியா தெரிவித்துள்ளது.
அண்மையில் இலங்கையில் காணாமல் போனோர் அலுவலகம் குறித்த சட்டம் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையானது நல்லிணக்கப் பாதையின் முக்கிய நகர்வாக கருதப்பட முடியும் என பிரித்தானியா சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த அலுவலகம் ஊடாக காணாமல் போனோரின் குடும்ப உறுப்பினர்களுக்கு நன்மை ஏற்படும் என தெரிவித்துள்ளது.
தாம் நேசித்தவர்களுக்கு என்னவாயிற்று என்பதனை அறிந்து கொள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு ஓர் சந்தர்ப்பம் கிடைக்கும் எனவும், இதன் ஊடாக நல்லிணக்கத்தை வலுப்படுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளது.
ஆயிரக் கணக்கான முறைப்பாடுகள் தொடர்பில் அலுவலகம் நடவடிக்கை எடுக்கும் போது சவால்களை எதிர்நோக்க நேரிடும் என்பதனை ஒப்புக்கொளவ்தாக பிரித்தானியா குறிப்பிட்டுள்ளது.