இன்றைய அரசு கூட்டாக தமது அரசியல் பயணத்தை தொடர்ந்தாலும் சுதந்திர கட்சியை இரு கூறுகளாக பிளவுபடுத்த ஐக்கிய தேசியக்கட்சி எடுக்கின்ற பிரயத்தனங்களை முறியடிப்பதற்கான பல்வேறு வகையான முயற்சிகளை கட்சி தலைவர் என்கின்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி எடுத்தாக வேண்டும் .
இல்லையேல் சுதந்திர கட்சியை இல்லாமல் செய்த தலைமையாக வரலாறு ஜனாதிபதி யை சுட்டி நிற்க்கும்
அதே போல் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் தந்தையுனுடைய கட்சியான சுதந்திர கட்சியை ஒரு போதும் அவர்கள் இரண்டாம் நிலைக்கு கொண்டு செல்லப் போவதுமில்லை.
இதை வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இரு ஜனாதிபதிகளும் சுதந்திர கட்சி ஆதரவாளர்களும் அமைச்சர்களும் இருக்கின்ற நிலையில் மறு புறம் டயஸ்போரா வினுடைய ஆதிக்கமும் இணைந்த வடகிழக்கில் இனப்பிரச்சினைக்கு தீர்வு என்கிற விடயத்தை முன்மொழிகின்ற நிலையில் அதற்க்கு செவி சாய்க்கின்ற வடகிழக்கு இணைப்பு தொடர்பில் பேச முடியாத எச்சங்களாக ஏற்கனவே வாய்மூடி இருக்கதக்கதாக முழு நிகழ்ச்சி நிரலும் முஸ்லீம் தலைமைகளிடையே நிறைவடைந்த நிலையில் வடகிழக்கு இணைப்பு என்கின்ற விடயத்தை ஒரு போதும் சுதந்திர கட்சி தலைமைகள் அங்கீகரிக்க போவதில்லை.
இந்த இரு விடயங்களை நடை முறைப்படுத்தவும் முஸ்லீம்களின் பிரச்சினைகளை தெளிவாகவும் உரிய முறையிலும் நடைமுறைப்படுத்த இன்றைய சுதந்திர கட்சிக்கு தொப்பி பேரட்டாத சோரம் போகாத தலைமையான அதாஉல்லாஹ் தலைமையிலான கட்சியின் ஆதரவு இன்றியமையாதது .
இன்றைய அரசியல் களம் ஒரு நிலையடைந்திருப்பதாக உணர முடிகிறது
அதாஉல்லாஹ் தரப்பு என்கிற விடயம் கிழக்கு முஸ்லீம்களின் மத்தியில் தாக்கத்தை செலுத்துகிற தரப்பாகவும்
கடந்த காலங்களில் புலி பயங்கரவாதத்துக்கெதிராக குரல் கொடுத்த விதம் தொடர்பிலும் சந்திரிகா ,ஜனாதிபதி ,மகிந்த அமரவீர, துமிந்த திசாநாயக்க அறியாத விடயமல்ல
எனவே ஒரு போதும் அதாஉல்லாஹ் ரணிலோடு போக மாட்டார் என்கிற நிரந்தர நிலைப்பாடும் இங்கிருக்கிறது.
அதாஉல்லாஹ் பதவிக்காக வரிந்து கட்டிக் கொண்டு திரிகிற நிலைப்பாடு ஒரு போதும் எடுத்ததில்லை என்கிற விடயமும் நாம் அறியாமலில்லை
சுதந்திர கட்சியை வலுப்படுத்தவும் டயஸ்போரா வின் நெருக்குவாரங்களை குறைப்பதற்காகவும் இன்றைய அரசு அதாஉல்லாஹ்வையும் தேசிய காங்கிரஸையும் அரவணைக்கிறது .
அஸ்மி அப்துல் கபூர்