இலங்கையில் 2017 ஆம் ஆண்டு புதிய வரி முறை ஒன்றை அரசாங்கம் அறிமுகப்படுத்த உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று பிற்பகல் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன் உள்நாட்டு உற்பத்தி மற்றும் பெரிய ஏற்றுமதி சந்தை அறிமுகப்படுத்தல் என்பவற்றின் முக்கியத்துவம் குறித்தும் வலியுறுத்தியுள்ளார்.
அரசாங்கம் நாட்டின் வரி முறைகளை விரிவாக்குவதால் தேவைகள் எளிதாக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அடுத்த வருடம் புதிய வரி முறையை அறிமுகப்படுத்துவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்திடம் கலந்துரையாடல்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இந்த தீர்மானத்திற்கான ஆதரவை அனைத்து கட்சி உறுப்பினர்களும் வழங்க வேண்டும் என்றும் பிரதமர் இதன் போது தெரிவித்துள்ளார்.
அனைத்து கட்சிகளும் தங்கள் வேறுபாடுகளை புறம் தள்ளிவிட்டு நாட்டின் பொருளாதாரம் குறித்து கொந்தளித்து நாட்டின் வளர்ச்சிக்காக ஒன்று இணைய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.