பிரிட்டனைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் தினசரி போக்குவரத்துக்கு ரயில்களை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் ரயில்வே ஊழியர்கள் நேற்றுமுதல் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ரெயில்களின் கதவுகளை கண்டக்டர்களுக்குப் பதிலாக டிரைவர்களே மூட வேண்டும் என்ற புதிய அறிவிப்பை எதிர்த்து இந்த போராட்டத்தை ரெயில்வே ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.
நேற்று தொடங்கிய இந்த போராட்டம் வரும் வெள்ளிக்கிழமை வரை நீளுவதால் ஆயிரக்கணக்கான ரெயில் பயணிகள் அவதிப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
‘ரெயில்வே ஊழியர்களின் இந்த தொடர் போராட்டத்தால் பயணிகள் பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். தொழிற்சங்க தலைவர்கள் அவர்களது வசதிகளைப் பார்க்கிறார்களே தவிர மக்களின் சிரமங்களைக் கண்டு கொள்வதில்லை” என பிரிட்டன் பிரதமர் தெரசா மே ரெயில்வே ஊழியர்களின் போராட்டத்துக்கு கடுமையான கண்டனம் தெரிவித்திருக்கிறார்.